Nenjuku Needhi

கமல்ஹாசனை கண்டதும் கண்ணீர் விட்டு அழுத ரசிகர்.. நெகிழ வைக்கும் வைரல் வீடியோ

முகப்பு > சினிமா செய்திகள்

By |

சென்னை: கமல்ஹாசன் தனது ரசிகர்களை சர்ப்ரைஸாக சந்தித்துள்ள வீடியோ வெளியாகி செம்ம வைரலாகியுள்ளது.

Ulaganayagan actor Kamal Haasan surprises Fans viral video

Also Read | “கடவுளின் தேசத்தில் கமல்ஹாசன்”… ‘விக்ரம்’ விநியோகஸ்தர் ஷிபு தமீன்ஸ் மாஸ் update

விக்ரம் படத்தின் வெளியீட்டை ஒட்டி கமல்ஹாசன் தனது ரசிகர்களை சர்ப்ரைஸாக சந்தித்துள்ளார். சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் ரசிகர்களை அழைத்து, அவர்கள் கமல்ஹாசன் குறித்தும் அவருடைய படங்கள் & அவருடைய தாக்கம் குறித்து பேச வைத்து, ரசிகர்கள் பேசிக் கொண்டு இருக்கும் போது சர்ப்ரைஸாக பின் பக்கத்தில் இருந்து கமல்ஹாசன் திடிரென ரசிகர்கள் முன் தோன்றி ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுப்பார்.

இந்த நிகழ்வில் கலந்து கொண்ட ரசிகர்களிடம் கமல் கலந்துரையாடல் செய்வதையும், அவர்கள் அதற்கு பதில் அளிப்பதும் இடம்பெற்றுள்ளது. இதில் பங்கேற்ற ரசிகர்கள் கமல் ஹாசனை சந்தித்ததும் கண்ணீர் விட்டு அழுத நிகழ்வு காண்போரை நெகிழ வைப்பது போல உள்ளது.

Ulaganayagan actor Kamal Haasan surprises Fans viral video

விக்ரம் படம் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி என பான் இந்திய படமாக ஜூன்-3 அன்று வெளியாகிறது.

தமிழகத்தில் முன்னணி விநியோக நிறுவனமான ரெட் ஜெய்ன்ட் மூவிஸ் நிறுவனம் இந்த படத்தை வெளியிடுகிறது.

Ulaganayagan actor Kamal Haasan surprises Fans viral video

"விக்ரம்" படத்தை, மாநகரம், கைதி, மாஸ்டர் பட இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்குகிறார்.

இந்த படத்தில் கமல்ஹாசனுடன் நடிகர்கள் விஜய் சேதுபதியும், மலையாள நடிகர் பகத் பாசிலும் இணைந்து நடிக்கின்றனர். கமல்ஹாசனின் மகனாக காளிதாஸ் ஜெயராம் நடிக்கிறார்.

விஜய் சேதுபதிக்கு ஜோடியாக ஷிவானியும், மைனா நந்தினியும் நடிக்கின்றனர். நடிகர் சூர்யா சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார்.

Ulaganayagan actor Kamal Haasan surprises Fans viral video

கமல்ஹாசனின் ராஜ் கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் தயாரிக்கிறது. இந்த படத்தின் முதல் லுக் போஸ்டர், மேக்கிங் வீடியோ, முன்னோட்ட வீடியோ சமீபத்தில் வெளியாகி அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவர்ந்தது.

இந்தப் படத்திற்கு 'ஜல்லிக்கட்டு' படத்திற்காக தேசிய விருது வென்ற ஒளிப்பதிவாளர் கிரிஷ் கங்காதரன் ISC ஒளிப்பதிவு செய்கிறார். இசையமைப்பாளர் அனிருத் இசையமைக்கிறார். விக்ரம் படத்தின் ஆடியோ உரிமையை சோனி மியூசிக் நிறுவனம் கைப்பற்றியுள்ளது.

விக்ரம் படத்தின் ஒட்டுமொத்த வெளிநாட்டு  உரிமத்தை பிரபல வினியோகஸ்தர்களான AP International நிறுவனம் மிகப்பெரிய சாதனை விலைக்கு வாங்கி உள்ளனர்.

Ulaganayagan actor Kamal Haasan surprises Fans viral video

மேலும் விக்ரம் படத்தின் ஆந்திரப் பிரதேசம், தெலுங்கானா உரிமத்தை ஸ்ரேஷ்த்  மூவிஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளது. இதனை அந்நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இந்நிறுவனம் தெலுங்கு நடிகர் நிதினுக்கு சொந்தமானது ஆகும்.

விக்ரம் படத்தின் தெலுங்கு பதிப்புக்கு "விக்ரம் ஹிட் லிஸ்ட்" என பெயரிடப்பட்டுள்ளது.

Also Read | "விக்ரம்" ஸ்பெஷல் தண்ணீர் பாட்டில்.. பிரபல குடிநீர் நிறுவனத்தின் வேற லெவல் சம்பவம்!

கமல்ஹாசனை கண்டதும் கண்ணீர் விட்டு அழுத ரசிகர்.. நெகிழ வைக்கும் வைரல் வீடியோ வீடியோ

தொடர்புடைய இணைப்புகள்

Ulaganayagan actor Kamal Haasan surprises Fans viral video

People looking for online information on Kamal Haasan, Kamal Haasan surprises Fans, Ulaganayagan Kamal Haasan, Vikram Movie will find this news story useful.