Nenjuku Needhi

‘கேன்ஸ்’ திரைப்பட விழாவில் வெளியான ‘Top Gun Maverick’… டாம் க்ரூஸுக்கு ‘Palme d’Or’ விருது

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிப்பில் உருவான கேன்ஸ் திரைவிழாவில் Top Gun Maverick திரைப்பட திரையிடலில் Tom Cruiseக்கு கௌரவ  Palme d’Or விருது வழங்கப்பட்டது!

Actor Tom cruise honored in Cannes 2022

Also Read | #Breaking: ‘தளபதி 66’ ஐதராபாத் படப்பிடிப்பை முடித்து சென்னை திரும்பிய விஜய்… Viral Pic

Top Gun Maverick…

Paramount Pictures தயாரிப்பில் உருவான Top Gun Maverick திரைப்படத்தை இந்தியாவில் Viacom18 Studios நிறுவனம் மே 27 அன்று தியேட்டரில் வெளியிடுகிறது. Paramount Pictures மற்றும்  Skydance & Jerry Bruckheimer Films வழங்கும், Don Simpson / Jerry Bruckheimer தயாரிப்பில்,  Joseph Kosinski இயக்கத்தில்,  Tom Cruise நடித்துள்ள திரைப்படம்  “Top Gun: Maverick”.

இப்படத்தின் கதைக்கரு

கடற்படையின் சிறந்த விமானிகளில் ஒருவராக முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக சேவை செய்த பிறகு, பீட் "மேவரிக்" மிட்செல் (டாம் குரூஸ்), ஒரு தைரியமான சோதனை பைலட் பணியை மேற்கொள்கிறார் மற்றும் அவரை தொடரும் சிக்கல்களை துணிந்து எதிர்கொள்கிறார். அவர் TOPGUN பட்டதாரிகளின் ஒரு பிரிவினருக்குப் பயிற்சியளிக்கும் போது, எந்த உயிருள்ள விமானியும் இதுவரை கண்டிராத ஒரு சிறப்புப் பணிக்காக, அவருடைய இறந்துபோன நண்பனின் மகன்   “Rooster” என்றழைக்கப்படும்  லெப்டினன்ட் பிராட்லி பிராட்ஷா (மைல்ஸ் டெல்லர்) மற்றும்   “Goose” என்றழைக்கபடும் Radar Intercept அதிகாரி Lt. நிக் பிராட்ஷாவை  சந்திக்கிறார்.  நிச்சயமற்ற எதிர்காலத்தை நோக்கி பயணிக்கும் மேவரிக் , தனது கடந்த காலத்தின் துயரங்களை எதிர்கொண்டு, தனது சொந்த பயங்களை கடந்து இந்த பணியை மேற்கொள்கிறார்.  இந்த  பயணத்தில் பங்கேற்ற அனைவரும் பெரும் தியாகத்தைக் தர வேண்டிய சூழ்நிலைகளையும் சந்திக்கின்றனர்.

Actor Tom cruise honored in Cannes 2022

உருவாக்கிய கலைஞர்கள்…

இந்த படத்தை ஜோசப் கோசின்ஸ்கி இயக்க, திரைக்கதையை  எக்ரென் க்ரூகர், எரிக் வாரென் சின்கெர் மற்றும் கிரிஸ்டோபர் மெக்கெர் ஆகியோர் இணைந்து எழுதியுள்ளனர். படத்தின் கதையை பீட்டர் க்ரெக் மற்றும் ஜஸ்டின் மார்க்ஸ் ஆகியோர் எழுதியுள்ளனர். படத்துக்கான மூல கதாபாத்திர வடிவமைப்பு பணிகளை ஜிம் காஷ் மற்றும் ஜாக் எப்ஸ் ஜூனியர் ஆகியோர் மேற்கொள்ள ஜெர்ரி ப்ரூக்கெய்மர், டாம் க்ரூஸ், கிறிஸ்டோபர் மெக்கௌரி, டேவிட் எல்லிசன் ஆகியோர் தயாரித்துள்ளனர். எக்ஸிக்யூட்டிவ் தயாரிப்பாளர்களாக டாமி ஹார்பர், டானா கோல்ட்பெர்க், டான் க்ராங்கர், சாட் ஓமன், மைக் ஸ்டென்சன் ஆகியோர் பணியாற்றியுள்ளனர்.

இந்த படத்தில் டாம் க்ரூஸோடு, மைல்ஸ் டெல்லர், ஜெனிபர் கோனெல்லி, ஜோன் ஹாம், க்லென் பாவெல், லீவிஸ் புல்மென், சார்லஸ் பார்னெல், பாஷீர் சலஹுதீன், மோனிகா பார்பரோ, ஜே எல்லீஸ், டானி ராமிரெஸ், க்ரெக் டார்சான் டேவிஸ், எட் ஹாரிஸ் மற்றும் வால் கில்மர் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

Actor Tom cruise honored in Cannes 2022

Paramount Pictures

Paramount Pictures Corporation (PPC), பொழுதுபோக்கு துறையின்  உலகளாவிய தயாரிப்பாளர் மற்றும் விநியோகஸ்தர் மற்றும் Paramount (NASDAQ: PARA, PARAA)-ல் ஒரு பகுதியாகும்.  இது ஒரு முன்னணி உலகளாவிய ஊடகம் மற்றும் பொழுதுபோக்கு நிறுவனமாகும், இது உலகெங்கிலும் உள்ள பார்வையாளர்களுக்கு பிரீமியம் வகையிலான உள்ளடக்கம் மற்றும் அனுபவங்களை உருவாக்கி அளித்து வருகிறது.  Paramount Pictures, Paramount Animation, and Paramount Players உள்ளிட்ட பொழுதுபோக்குகளில் மிகவும் சக்திவாய்ந்த பிராண்டுகளின் தொகுப்புகள் Paramount Pictures நிறுவனத்தில் இயங்கி வருகிறது. PPC செயல்பாடுகளில் Paramount Home Entertainment, Paramount Pictures International, Paramount Licensing Inc. மற்றும் Paramount Studio Group ஆகியவையும் அடங்கும்.

Viacom18 Studios..

Viacom18 Studios என்பது இந்தியாவின் மிகச்சிறந்த முழுமையான ஒருங்கிணைந்த மோஷன் பிக்சர் ஸ்டுடியோ ஆகும், இது விமர்சன ரீதியாகவும் வணிக ரீதியாகவும் வெற்றிகரமான திரைப்படங்களை வழங்குவதன் மூலம் பெரும் சக்தியாக உருவெடுத்துள்ளது.

இந்நிறுவனம் இதுவரை Andhadhun (2018), Padmaavat (2018), Toilet – Ek Prem Katha (2017), Drishyam (2015), Gabbar is Back (2015), Margarita with a Straw (2015), Manjhi The Mountain Man (2015), Mary Kom (2014), Queen (2014), Bhaag Milkha Bhaag (2013), Madras Café (2013), Special 26 (2013) and Kahaani (2012) போன்ற வித்தியாசமான மற்றும் அர்த்தமுள்ள சினிமாவை வழங்கியுள்ளது.

Actor Tom cruise honored in Cannes 2022

பெங்காலி, மராத்தி, பஞ்சாபி மற்றும் தெற்கில் இருக்கும் பிராந்திய  மொழி திரைப்படங்களை வெற்றிகரமாக உருவாக்கிய சில ஸ்டுடியோக்களில் Viacom18 ஸ்டுடியோவும் ஒன்றாகும். இந்த  ஸ்டுடியோ வெற்றிகரமான மற்றும் மிகவும் பாராட்டப்பட்ட ஆக்கப்பூர்வமான திரைப்படங்களான Bombay Talkies, Gangs of Wasseypur I and II, OMG – Oh My God!, Dharam Sankat Main, Manjunath, Shaitan, That Girl in Yellow Boots, Pyaar ka Punchnama, Pyaar Ka Punchnama 2, Inkaar, Saheb, Biwi Aur Gangster Returns, Rahasya மற்றும் Boss போன்ற பல திரைப்படங்களுக்கு ஆதரவு அளித்துள்ளது

இந்தியாவில் Paramount…

இந்திய துணைக் கண்டத்தில் Paramount Pictures உடைய திரைப்படங்களை சந்தைப்படுத்துவதற்கும் விநியோகிப்பதற்கும் Paramount Pictures மேற்கொண்ட உத்திகள் பிளாக்பஸ்டர் படங்களைக் கொடுத்துள்ளன. அதற்கு உதாரணமான திரைப்படங்கள்  Transformers Dark of the Moon, Mission Impossible: Ghost Protocol, Madagascar 3, Hugo, Paranormal Activity, G.I. Joe: Retaliation, Jack Ryan: Shadow Recruit, Noah, Transformers – Age of Extinction, Terminator Genisys, Mission Impossible: Rogue Nation, Mission: Impossible Fallout,  XXX: Return of Xander Cage மற்றும் பல படங்கள் வெளியாகியுள்ளன.

Also Read | “கடவுளின் தேசத்தில் கமல்ஹாசன்”… ‘விக்ரம்’ விநியோகஸ்தர் ஷிபு தமீன்ஸ் மாஸ் update

Actor Tom cruise honored in Cannes 2022

People looking for online information on Cannes 2022, Cannes Film Festival, Tom cruise will find this news story useful.