ஷாருக்கான் - அட்லி படத்தில் இணைந்த பிரபல தமிழ் நடிகர்.. அவரே சொன்ன வேறமாரியான தகவல்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக் கானுக்கு இந்தியா மட்டுமல்லாமல் உலகம் முழுவதும் மிகப்பெரிய ரசிகர்கள் உள்ளனர்.

Yogi Babu Confirmed His Place in Atlee Shahrukh Khan Movie

Also Read | Thalapathy66 : விஜய் - ராஸ்மிகா நடிக்கும் புதிய படத்துல காமெடியன் இவரா? போடு வெடிய

ஷாருக்கான் நடிப்பில் 2013 ஆம் ஆண்டு சென்னை எக்ஸ்பிரஸ் படமும், 2014 ஆம் ஆண்டு வெளியான ஹாப்பி நியூ இயர் படமும் கடைசியாக 2015ல்  வெளியான தில்வாலே படமும் வெற்றி பெற்றது. தொடர் வெற்றிகளால் உச்சத்தில் இருந்த ஷாருக்கானுக்கு, ரயிஸ், பேன், ஜீரோ படங்கள் அடுத்தடுத்து தோல்வி அடைந்தன.

இதனால் சினிமாவில் இருந்து சிறிது காலம் ஒதுங்கினார். பல இயக்குனர்களிடம் கதை கேட்டார். தமிழில் வெற்றிமாறன், அட்லி ஆகியோர் கதை சொல்ல, அட்லி அடுத்த படத்தை இயக்க ஒப்பந்தமானார். அதே போல் ராஜ்குமார் ஹிரானியுடன் ஒரு படமும் கமிட் ஆனார்.

Yogi Babu Confirmed His Place in Atlee Shahrukh Khan Movie

தமிழில் ராஜாரானி, மெர்சல், பிகில், தெறி படங்களை இயக்கியவர் இயக்குனர் அட்லி. விஜய் நடிப்பில் பிகில் படம் தயாரான பொழுதே ஷாருக்கானுக்கு ஒரு கதை சொல்லி, ஷாருக்கானின் ரெட் சில்லி நிறுவனம் தயாரிப்பில் படம் இயக்க ஒப்பந்தமானார். இந்த படம் பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் இன்னும் வரவில்லை.

இருப்பினும் அட்லி (Atlee) இயக்கத்தில் ஷாருக்கான் நடிக்கும் இந்தி படத்தின் படப்பிடிப்பு புனேயில் தொடங்கி, மும்பை சுற்றுவட்டார பகுதிகளில் நடைபெற்று வருகிறது என தகவல்கள் தெரிவிக்கின்றன. ஷாருக்கானுக்கு (Shah Rukh Khan) ஜோடியாக நயன்தாரா (Nayanthara) நடிப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Yogi Babu Confirmed His Place in Atlee Shahrukh Khan Movie

மேலும் தமிழில் பருத்திவீரன், ராவணன், தோட்டா, மலைக்கோட்டை போன்ற படங்களில் நடித்த நடிகை பிரியாமணி (Priyamani) ஒரு முக்கிய வேடத்தில் இந்த படத்தில் நடிக்கிறார் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த படத்திற்கு ஒளிப்பதிவாளர் ஜி.கே.விஷ்ணு ஒளிப்பதிவு செய்கிறார். இசைப்புயல் ஏ.ஆர். ரகுமான் அல்லது அனிருத் இசையமைக்கலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த படத்திற்கு "Lion" என பெயர் வைக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.  தற்காலிகமாக தோராய (Tentative) தலைப்பாக இது இருக்கலாம் என்றும், படத்தின் அதிகாரப்பூர்வ (Official) தலைப்பு இனிமேல் தான் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் நடிகர் யோகிபாபு, டிவிட்டரில் ரசிகர் ஒருவர் எழுப்பிய, "ஷாருக்கான் - அட்லி படத்தில் நடிக்கிறீர்களா?" என்ற கேள்விக்கு, "ஆம்" என பதில் அளித்தார்.

Yogi Babu Confirmed His Place in Atlee Shahrukh Khan Movie

சில நாட்களுக்கு முன் யோகிபாபு, அட்லி - ஜி.கே விஷ்ணுவுடன் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்து, என் சகோதரர்கள் என கேப்சன் போட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.

Yogi Babu Confirmed His Place in Atlee Shahrukh Khan Movie

8 ஆவது Behindwoods Gold Medals விருதுகள் இந்த ஆண்டு சென்னை தீவுத்திடலில் உள்ள island மைதானத்தில் மே 15 மற்றும் 22 ஆகிய தேதிகளில் மாலை 6 மணி முதல் இரவு 11.30 மணி வரை நடக்க உள்ளது. இதற்கான டிக்கெட் முன்பதிவு தற்போது தொடங்கியுள்ளது.

நிகழ்ச்சி டிக்கெட் முன் பதிவு செய்யும் லிங்க். https://behindwoods.com/bgm8

ஷாருக்கான் - அட்லி படத்தில் இணைந்த பிரபல தமிழ் நடிகர்.. அவரே சொன்ன வேறமாரியான தகவல்! வீடியோ

தொடர்புடைய இணைப்புகள்

Yogi Babu Confirmed His Place in Atlee Shahrukh Khan Movie

People looking for online information on Atlee, Nayanthara, Priyamani, Shahrukh Khan movie, Yogi Babu will find this news story useful.