அட்லி இயக்கத்தில் ஷாருக்கான் - நயன்தாரா நடிக்கும் புதிய படம்.. ரிலீஸ் எப்போ? மாஸ் அப்டேட்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக் கானுக்கு இந்தியா மட்டுமல்லாமல் உலகம் முழுவதும் மிகப்பெரிய ரசிகர்கள் உள்ளனர்.

Atlee Shahrukh Khan Jawan Movie Release Date Officially Announced

Also Read | அப்படி போடு.. அட்லி- ஷாருக்கான் இணையும் புதிய இந்தி படத்தலைப்பு இது தானா? சூப்பர் தகவல்!

ஷாருக்கான் நடிப்பில் 2013 ஆம் ஆண்டு சென்னை எக்ஸ்பிரஸ் ப்டமும், 2014 ஆம் ஆண்டு வெளியான ஹாப்பி நியூ இயர் படமும் கடைசியாக 2015ல்  வெளியான தில்வாலே படமும் வெற்றி பெற்றது. தொடர் வெற்றிகளால் உச்சத்தில் இருந்த ஷாருக்கானுக்கு, ரயிஸ், பேன், ஜீரோ படங்கள் அடுத்தடுத்து தோல்வி அடைந்தன.

இதனால் சினிமாவில் இருந்து சிறிது காலம் ஒதுங்கினார். பல இயக்குனர்களிடம் கதை கேட்டார். தமிழில் வெற்றிமாறன், அட்லி ஆகியோர் கதை சொல்ல, அட்லி அடுத்த படத்தை இயக்க ஒப்பந்தமானார். அதே போல் ராஜ்குமார் ஹிரானியுடன் ஒரு படமும் கமிட் ஆனார்.

Atlee Shahrukh Khan Jawan Movie Release Date Officially Announced

இந்த படங்களுக்கு முன்பே இந்தியில் ஹிர்திக் ரோஷன் நடிப்பில் வெளியாகி ப்ளாக்பஸ்டர் ஆன வார் படத்தின் இயக்குனர் சித்தார்த் ஆனந்த் இயக்கத்தில் பதான் படத்தில் நடிக்க கமிட் ஆனார்.  இப்படத்தில் ஷாருக்கானுக்கு ஜோடியாக நடிகை தீபிகா படுகோனே நடிக்கிறார். மேலும் பிரபல பாலிவுட் நடிகர் ஜான் ஆபிரஹாம் முக்கிய ரோலில் நடிக்கிறார்.

பான் இந்திய படமாக இந்தி, தமிழ், தெலுங்கு உள்ள்ளிட்ட பிராந்திய மொழிகளிலும் 2023 ம் ஆண்டு ஜனவரி 25ம் தேதி திரையரங்குகளில் இந்த படம் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Atlee Shahrukh Khan Jawan Movie Release Date Officially Announced

இதில் ராஜ்குமார் ஹிரானியின் படம் பற்றிய அதிகாரபூர்வ அறிவிப்பு சிலநாட்களுக்கு முன் ஷாருக்கான் வெளியிட்டார். ஜியோ ஸ்டூடியோஸ், ஷாருக்கானின் ரெட் சில்லி நிறுவனம், ராஜ் குமார் ஹிரானியின் நிறுவனம் இணைந்து இந்த படத்தை தயாரிக்கின்றன.

Atlee Shahrukh Khan Jawan Movie Release Date Officially Announced

இந்த படத்திற்கு Dunki  என பெயரிடப்பட்டுள்ளது. Dunki திரைப்படத்தில் ஷாருக்கானுக்கு ஜோடியாக நடிகை டாப்ஸி  நடிக்கவுள்ளார்.  2023 ஆம் ஆண்டு, டிசம்பர் மாதம் 22 ஆம் தேதி கிறிஸ்துமசை முன்னிட்டு Dunki திரைப்படம் வெளியாகும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Atlee Shahrukh Khan Jawan Movie Release Date Officially Announced

இந்நிலையில் இன்று (03.03.2022) அட்லி - ஷாருக்கான் படத்தின் அறிவிப்பு டீசர் வடிவில் வெளியாகி உள்ளது. இப்படத்திற்கு 'ஜவான்' 'Jawan' என பெயரிடப்பட்டுள்ளது. இந்த ஜவான் படம், ஜூன் 2, 2023 அன்று திரையரங்குகளில் ரிலீசாக உள்ளது. ஒரே ஆண்டில் ஷாருக்கான் நடிப்பில் 3 படங்கள் ரிலீசாக உள்ளது ரசிகர்களுக்கு பெரும் மகிழ்ச்சியை கொடுத்துள்ளது.

Also Read | 'விக்ரம்' படத்துல சூர்யா கேரக்டர் பேரு இது தானா? FDFS-ல் உற்சாகமான ரசிகர்கள்!

தொடர்புடைய இணைப்புகள்

Atlee Shahrukh Khan Jawan Movie Release Date Officially Announced

People looking for online information on Atlee, Atlee Hindi Movie, Jawan, Shahrukh Khan, Shahrukh Khan Jawan Movie Release Updates will find this news story useful.