“இனிமே Title-அ ‘கருப்பு கமல்ஹாசன்’னு போடணும்…” ’விக்ரம்’ எப்படி இருக்கு? கூல் சுரேஷின் Viral video

முகப்பு > சினிமா செய்திகள்

By |

விக்ரம் திரைப்படத்தைப் பார்த்த பின்னர் படக்குழுவை பாராட்டி நடிகர் கூல் சுரேஷ் பேசியுள்ள வீடியோ கவனம் பெற்று வருகிறது.

Actor cool Suresh comments on Vikram went viral

Also Read | BREAKING: சிவகார்த்திகேயனை இயக்கும் ‘மண்டேலா’ மடோன் அஸ்வின்… வில்லனாக பிரபல இயக்குனரா?

விக்ரம் ரிலீஸ்…

கமல்ஹாசன் நடிப்பில் நான்காண்டு இடைவெளிக்குப் பிறகு  ‘விக்ரம்’ திரைப்படம் இன்று உலகம் முழுவதும் 5 மொழிகளில் ரிலீஸாகி உள்ளது.. இந்த படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ளார்.  அனிருத் இசையமைக்க, கமலின் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனமே தயாரித்துள்ளது. கமலுடன், விஜய் சேதுபதி மற்றும்  பஹத் பாசில் ஆகிய இருவரும் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். அனிருத் இசையில் உருவாகியுள்ள பாடல்கள் ரிலீஸூக்கு முன்பே வைரல் ஹிட் ஆகின. அதுபோல மிரட்டலான தீம் இசையும் கவனம் பெற்றுள்ளது. இந்த படத்துக்கு ஆரம்பம் முதலே எதிர்பார்ப்புகள் அதிகமாக இருந்தன. இந்நிலையில் இன்று காலை பல திரையரங்குகளில் ரசிகர்கள் அதிகாலைக் காட்சிக்கு கூடி கொண்டாடி தள்ளினர். அதையடுத்து தற்போது பல இடங்களில் காலை சிறப்புக் காட்சிகள் நிறைவடைந்து ரசிகர்கள் படம் பார்த்து முடித்துள்ளனர்.

Actor cool Suresh comments on Vikram went viral

கூல் சுரேஷ்…

சமீபகாலமாக நடிகர் கூல் சுரேஷ், ரிலீஸாகும் படங்களைப் பார்த்து தியேட்டர் வாசலிலியே ஊடகங்களை சந்தித்து படங்களைப் பற்றிய கருத்துகளைப் பேசிவருகிறார். அவரின் இந்த வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. அந்த வகையில் இப்போது அவர் பேசிய மாநாடு, வலிமை, பீஸ்ட் மற்றும் நெஞ்சுக்கு நீதி ஆகிய படங்களைப் பற்றிய வீடியோக்கள் இணையத்தில் வைரலாகின.

Actor cool Suresh comments on Vikram went viral

கருப்பு கமல்ஹாசனா?

அந்த வரிசையில் இப்போது அவர் இன்று வெளியாகியுள்ள விக்ரம் திரைப்படத்தைப் பார்த்து தியேட்டர் வாசலில் படத்தைப் பாராட்டிய வீடியோ கவனம் பெற்றுள்ளது. அந்த படத்தில் படக்குழுவினர் அனைவரையும் பாராட்டியுள்ள கூல் சுரேஷ் படம் தமிழ் சினிமாவுக்கு பெருமை ஏற்படுத்தக் கூடிய ஒரு படமாக அமையும் எனக் கூறியுள்ளார். மேலும் படத்தில் நடித்துள்ள விஜய் சேதுபதியின் கதாபாத்திரம் பற்றி பேசும் போது “மிஸ்டர் விஜய் சேதுபதி உங்க மனசுல என்ன  கருப்பு கமல்ஹாசன்னு நெனப்பா… உங்க மனசுல என்ன நெனச்சுட்டு இருக்கீங்க… ஆமாம்… நீங்க கருப்பு கமல்ஹாசன்தான். இந்த படத்துல ஒரு கமல்ஹாசனா இல்ல ரெண்டு கமல்ஹாசனா என எனக்கே தோணுது… உங்கள வாழ்த்துறத விட நான் வணங்குகிறேன். சூப்பர்..  உங்களால தமிழ் சினிமாவுக்கே பெருமை. இனிமேல் அடுத்து வரும் படங்களில் எல்லாம் கருப்பு கமல்ஹாசன் விஜய் சேதுபதி என்று பெயர் போட வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறேன்.” என்று பாராட்டித் தள்ளியுள்ளார்.

Actor cool Suresh comments on Vikram went viral

Also Read | “அந்த feeling-அ எப்படி சொல்றது… ரொம்ப மிஸ் பண்றேன்”… இந்த வாரம் விஜய் அம்மா சொன்ன குட்டி Story

“இனிமே TITLE-அ ‘கருப்பு கமல்ஹாசன்’னு போடணும்…” ’விக்ரம்’ எப்படி இருக்கு? கூல் சுரேஷின் VIRAL VIDEO வீடியோ

தொடர்புடைய இணைப்புகள்

Actor cool Suresh comments on Vikram went viral

People looking for online information on Cool Suresh about Vikram Movie, Vikram Movie, Vikram Movie FDFS will find this news story useful.