“சூர்யா Entry சூப்பர்…. Pure Fanboy சம்பவம்”… ‘விக்ரம்’ படம் எப்படி இருக்கு? FDFS பார்த்த Fans கருத்து

முகப்பு > சினிமா செய்திகள்

By |

 

kamal Vikram movie FDFS Fans comment viral video

விக்ரம் திரைப்படத்தின் FDFS பார்த்த ரசிகர்களின் கருத்துகள் தற்போது வெளியாக ஆரம்பித்துள்ளன.

விக்ரம் ரிலீஸ்…

கமல்ஹாசன் நடிப்பில் நான்காண்டு இடைவெளிக்குப் பிறகு  ‘விக்ரம்’ திரைப்படம் இன்று உலகம் முழுவதும் 5 மொழிகளில் ரிலீஸாகி உள்ளது.. இந்த படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ளார்.  அனிருத் இசையமைக்க, கமலின் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனமே தயாரித்துள்ளது. கமலுடன், விஜய் சேதுபதி மற்றும்  பஹத் பாசில் ஆகிய இருவரும் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். அனிருத் இசையில் உருவாகியுள்ள பாடல்கள் ரிலீஸூக்கு முன்பே வைரல் ஹிட் ஆகின. அதுபோல மிரட்டலான தீம் இசையும் கவனம் பெற்றுள்ளது.

kamal Vikram movie FDFS Fans comment viral video

விக்ரம் ரிலீஸ் கொண்டாட்டம்…

நான்காண்டுகள் நடிகர் கமல்ஹாசனின் எந்த திரைப்படமும் ரிலீஸாகததால், இந்த படத்துக்கு ஆரம்பம் முதலே எதிர்பார்ப்புகள் அதிகமாக இருந்தன. இந்நிலையில் இன்று காலை பல திரையரங்குகளில் ரசிகர்கள் அதிகாலைக் காட்சிக்கு கூடி கொண்டாடி தள்ளினர். அதையடுத்து தற்போது பல இடங்களில் காலை சிறப்புக் காட்சிகள் நிறைவடைந்து ரசிகர்கள் படம் பார்த்து முடித்துள்ளனர்.

kamal Vikram movie FDFS Fans comment viral video

ரசிகர்கள் பார்வை…

இந்நிலையில் முதல் நாள் முதல் காட்சி படம் பார்த்த ரசிகர்கள் பிஹைண்ட்வுட்ஸ் சேனலில் தங்களின் படம் சம்மந்தமான கருத்துகளைப் பகிர்ந்துள்ளனர். அதில் பலரும் படம் சிறப்பான ஆக்ஷன் பட அனுபவத்தை தருவதாக கூறியுள்ளனர். மேலும் “சூர்யாவின் கடைசி நேர எண்ட்ரி” சிறப்பாக இருந்ததாகவும் “லோகேஷின் fan boy சம்பவமாக விக்ரம் வெளியாகியுள்ளதாகவும்” தெரிவித்துள்ளனர். அதுபோலவே பகத் ஃபாசில் மற்றும் விஜய் சேதுபதி ஆகியோரின் நடிப்பையும் பாராட்டி தள்ளியுள்ளனர். நான்காண்டுகளுக்கு கமல் சரியான கம்பேக் படத்தோடு வந்துள்ளதாகவும் நேர்மறையான கருத்துகளை பகிர்ந்து வருகின்றனர். இது சம்மந்தமான வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகியுள்ளது.

kamal Vikram movie FDFS Fans comment viral video

வீடியோ இணைப்பு கீழே

“சூர்யா ENTRY சூப்பர்…. PURE FANBOY சம்பவம்”… ‘விக்ரம்’ படம் எப்படி இருக்கு? FDFS பார்த்த FANS கருத்து வீடியோ

தொடர்புடைய இணைப்புகள்

kamal Vikram movie FDFS Fans comment viral video

People looking for online information on Fahadh fassil, Kamal, Lokesh, Suriya, Vijay Sethupathi will find this news story useful.