'விக்ரம்' பாத்துட்டு.. உதயநிதி போட்ட ட்வீட்.. பதிலுக்கு கமல் கொடுத்த ரியாக்ஷன்.. வைரல் பதிவு

முகப்பு > சினிமா செய்திகள்

By |

கடைசியாக நடிகர் கமல்ஹாசன் நடிப்பில், கடந்த 2018 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம், விஸ்வரூபம் 2 திரைப்படம் ரிலீஸ் ஆகியிருந்தது.

udhayanidhi stalin tweets after watching vikram movie

இதனைத் தொடர்ந்து, சுமார் நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு, கமல்ஹாசன் நடித்து, நாளை மறுநாள் (03.06.2022) ரிலீசாக உள்ள 'விக்ரம்' படத்தின் மீது ஒட்டு மொத்த ரசிகர்களின் எதிர்பார்ப்பும் உள்ளது.

தீவிர கமல் ரசிகரான லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், ஃபேன்பாய் படமாக விக்ரம் உருவாகியுள்ள நிலையில், இதில் கமல்ஹாசனுடன் நடிகர்கள் விஜய் சேதுபதி மற்றும் பகத் ஃபாசில் ஆகியோரும் நடித்துள்ளனர்.

விக்ரம் படத்தில் சூர்யா

அனிருத் இசையமைத்துள்ள இந்த படத்திற்கு, அன்பறிவ் ஸ்டண்ட் மாஸ்டராக பணிபுரிந்துள்ளனர். மேலும் பிரபல ஒளிப்பதிவாளர் கிரீஷ் கங்காதரன், இந்த படத்திற்கு ஒளிப்பதிவு செய்துள்ளார். தமிழகத்தில் முன்னணி விநியோக நிறுவனமான உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெய்ன்ட் மூவிஸ் நிறுவனம் இந்த படத்தை வெளியிடுகிறது.

கடந்த சில தினங்களுக்கு முன், விக்ரம் படத்தின் பாடல்கள் மற்றும் டிரைலர் வெளியாகி, மக்கள் மத்தியில் அதிக ஆவலை ஏற்படுத்தி இருந்தது. முழுக்க முழுக்க ஆக்ஷன் கலந்த ஒரு திரைப்படமாக விக்ரம் உருவாகியுள்ளது, டிரைலர் மூலம் தெரிய வரும் நிலையில், நடிகர் சூர்யாவும் ஒரு சிறிய வேடத்தில் நடித்துள்ளதாக இயக்குனர் லோகேஷ் கனகராஜ் ஏற்கனவே தெரிவித்திருந்தார்.

மேலும், விக்ரம் படத்தின் ப்ரமோஷன் வேலைகளும் கடந்த சில தினங்களாக தீவிரமாக நடைபெற்று வருகிறது. பேன் இந்தியன் படம் என்பதால், ஒட்டுமொத்த இந்திய அளவிலும் இந்த படத்தின் புரோமோஷன் வேலைகள் நடைபெற்று வருகிறது.

விக்ரம் பாத்துட்டு உதயநிதி போட்ட ட்வீட்

இந்நிலையில் நடிகரும், தயாரிப்பாளருமான உதயநிதி ஸ்டாலின், விக்ரம் படம் பார்த்து விட்டு, தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து கொண்ட கருத்து, தற்போது அதிகம் வைரலாகி வருகிறது. விக்ரம் படம் தொடர்பாக உதயநிதி பகிர்ந்த ட்வீட்டில், "விக்ரம் சூப்பர். உலகநாயகன் கமல் சார், லோகேஷ், அனிருத், விஜய் சேதுபதி, பகத் ஃபாசில் உள்ளிட்ட இந்த திரைப்பட குழுவினர் அனைவருக்கும், இப்படி ஒரு திரைப்பட அனுபவம் கொடுத்ததற்காக எனது நன்றிகள். Sure Blockbuster" என குறிப்பிட்டுள்ளார்.

நன்றி சொன்ன கமல்ஹாசன்

இதற்கு லோகேஷ் கனகராஜ் நன்றி தெரிவித்திருந்த நிலையில், உதயநிதி ட்வீட்டை பகிர்ந்த நடிகர் கமல்ஹாசன், "டியர் உதயநிதி ஸ்டாலின் தம்பி, விக்ரம் படத்திற்கான உங்கள் முதல் விமர்சனத்திற்கு நன்றி. படத்திற்கான உங்கள் விமர்சனம், படக்குழுவினர் அனைவரையும் மிக அதிக அளவில் உற்சாகப்படுத்தும்" என நெகிழ்ந்து போய் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பான பதிவுகள், தற்போது இணையத்தில் அதிகம் வைரலாகி வருகிறது.

தொடர்புடைய இணைப்புகள்

udhayanidhi stalin tweets after watching vikram movie

People looking for online information on Anbariv, Anirudh Ravichander, Fahadh Faasil, Girish Gangadharan, Kamal Haasan, Lokesh Kanagaraj, Udhayanidhi Stalin, Vijay Sethupathi, Vikram Movie will find this news story useful.