'விக்ரம்' படத்துல சூர்யா கேரக்டர் பேரு இது தானா? FDFS-ல் உற்சாகமான ரசிகர்கள்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

'விக்ரம்' படத்தில் சூர்யாவின் கதாபாத்திர பெயர் முதற்காட்சி மூலம் வெளியாகி உள்ளது.

Lokesh Kanagaraj Vikram Movie Suriya Charecter Name Rolex

Also Read | “அந்த feeling-அ எப்படி சொல்றது… ரொம்ப மிஸ் பண்றேன்”… இந்த வாரம் விஜய் அம்மா சொன்ன குட்டி Story

‘விக்ரம்’ திரைப்படம் இன்று உலகம் முழுவதும் 5 மொழிகளில் ரிலீஸாகி உள்ளது. இந்த படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ளார்.  அனிருத் இசையமைக்க, பிலோமின் ராஜ் எடிட்டராக பணியாற்றியுள்ளார். கிரிஷ் கங்காதரண் ஒளிப்பதிவு செய்துள்ளார். கமலின் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனமே தயாரித்துள்ளது. கமலுடன், விஜய் சேதுபதி மற்றும்  பஹத் பாசில் ஆகிய இருவரும் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர்.

Lokesh Kanagaraj Vikram Movie Suriya Charecter Name Rolex

நடிகர் சூர்யா சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார். காளிதாஸ் ஜெயராமன் கமலின் மகனாக 'பிரபஞ்சன்' எனும் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். விஜய் சேதுபதிக்கு ஜோடியாக மைனா நந்தினி, ஷிவானி, மகேஸ்வரி நடித்துள்ளனர்.

Lokesh Kanagaraj Vikram Movie Suriya Charecter Name Rolex

இப்படத்தில் கமல் கர்ணன் & விக்ரம் என்ற இரு பெயரிலும் நடித்துள்ளார். விஜய் சேதுபதி 'டாக்டர் சந்தனம்' எனும் பெயரிலும் , பஹத் பாசில் 'அமர்' எனும் பெயரிலும் நடித்துள்ளனர். இதனை படக்குழு முன்னரே அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. ஆனால் நடிகர் சூர்யாவின் பெயர் குறித்து எவ்வித அறிவிப்பினையும் படக்குழு சார்பில் அறிவிக்கப்படாமல் இருந்தது.

Lokesh Kanagaraj Vikram Movie Suriya Charecter Name Rolex

இன்று முதல்காட்சி படம் பார்த்த ரசிகர்கள் மூலம் சூர்யாவின் பெயர் தெரியவந்துள்ளது. இப்படத்தில் சூர்யா, 'ரோலக்ஸ்' எனும் பெயரில் சிறப்புத்தோற்றத்தில் நடித்துள்ளார். ஒட்டுமொத்த போதைபொருள் கடத்தும் மாஃபியா வில்லன் குழுவுக்கும் தலைவானாக சூர்யா தோன்றியுள்ளார்.

தமிழகத்தில் முன்னணி விநியோக நிறுவனமான ரெட் ஜெய்ன்ட் மூவிஸ் நிறுவனம் இந்த படத்தை வெளியிட்டுள்ளது.

Also Read | BREAKING: சிவகார்த்திகேயனை இயக்கும் ‘மண்டேலா’ மடோன் அஸ்வின்… வில்லனாக பிரபல இயக்குனரா?

தொடர்புடைய இணைப்புகள்

Lokesh Kanagaraj Vikram Movie Suriya Charecter Name Rolex

People looking for online information on Anirudh Ravichander, Fahadh, Kamal Haasan, Lokesh Kanagaraj, Vijay Sethupathi, Vikram Movie, Vikram Movie Suriya Charecter will find this news story useful.