அட... '80s' விக்ரம் படத்தோட, விஜய் சேதுபதிக்கு இப்படி ஒரு Connection இருக்கா??.. வேற லெவல்ப்பா.!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், நடிகர் கமல்ஹாசன் நடிப்பில், உருவாகி உள்ள 'விக்ரம்' திரைப்படம், ஜூன் 3 ஆம் தேதியன்று ரிலீஸ் ஆக உள்ளது.

Vijay sethupathi look from vikram link with old vikram movie

Also Read | துபாயில் ஸ்கை டைவிங் செய்த பிரபல நடிகை.. "கொஞ்சம் கூட அசராம இருக்காங்களே.." வைரல் வீடியோ

அனிருத் இசையமைத்துள்ள இந்த படத்தை, நடிகர் கமலின் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. சுமார் 4 ஆண்டுகளுக்கு பின், கமலின் திரைப்படம் திரையரங்குகளில் வெளியாக உள்ளதால், ரசிகர்கள் மிகுந்த ஆவலுடன் உள்ளனர்.

இந்த படத்தில், கமல்ஹாசனுடன், விஜய் சேதுபதி, பகத் ஃபாசில் உள்ளிட்டோரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இது போக, சூர்யாவும் கவுரவ தோற்றத்தில் நடித்திருப்பதை இயக்குனர் லோகேஷ் கனகராஜ் உறுதி செய்திருந்தார்.

Vijay sethupathi look from vikram link with old vikram movie

என்ன கதாபாத்திரம்?

விக்ரம் படத்தின் டிரைலர் மற்றும் பாடல்கள் ஏற்கனவே வெளியாகி, மக்களின் எதிர்பார்ப்பை பல மடங்கு அதிகரித்துள்ளது. அதே போல, ஏராளமான நட்சத்திரங்களும் இருப்பதால் திரைப்படம் எப்படிப்பட்ட கதையம்சம் கொண்டிருக்கும் என்பதை அறியவும், ரசிகர்கள் மிகுந்த ஆர்வத்துடன் உள்ளனர். படத்திற்கான முன்பதிவும் சமீபத்தில் தொடங்கி இருந்த நிலையில், படத்தில் நடிக்கும் நடிகர்களின் கதாபாத்திரத்தின் பெயர் என்ன என்பதை விக்ரம் படக்குழு அடுத்தடுத்து வெளியிட்டு வருகிறது.

Vijay sethupathi look from vikram link with old vikram movie

அந்த வகையில், பகத் ஃபாசிலின் பெயர் அமர் என்பதை போஸ்டர் ஒன்றுடன் படக்குழு நேற்று அறிவித்திருந்தது. இதனைத் தொடர்ந்து, விஜய் சேதுபதியின் கதாபாத்திரத்தின் பெயர் என்ன என்பதை படக்குழு இன்று அறிவித்திருந்தது. அதன்படி, சந்தானம் என்னும் பெயரில் விஜய் சேதுபதி, விக்ரம் படத்தில் வருகிறார் என்பது உறுதியாகி உள்ளது.

Vijay sethupathi look from vikram link with old vikram movie

விஜய் சேதுபதியின் கண்ணாடி

இந்நிலையில், இந்த போஸ்டரில் நடிகர் விஜய் சேதுபதி அணிந்திருக்கும் கண்ணாடி ஒன்றை, பிரபல நடிகரின் கண்ணாடி ஒன்றுடன் ஒப்பிட்டு ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். விஜய் சேதுபதி அணிந்திருக்கும் கண்ணாடியில் ஒரு பக்கம் மட்டும் லென்ஸ் இருக்கும். மறுபக்கம், காலியாக ஃபிரேம் மட்டும் தான் இருக்கும். இதே போன்றதொரு கண்ணாடியை தான், விக்ரம் படத்தில் நடிகர் சத்யராஜ் அணிந்திருப்பார். அப்படி அவர் அணிந்து கொண்டிருக்கும் புகைப்படத்தினை பகிர்ந்து, அதனுடன் விஜய் சேதுபதி லுக்கை இணைத்து ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர். மேலும், விக்ரம் படத்தில் வரும் சத்யராஜ் கதாபாத்திரம் தான் விஜய் சேதுபதிக்கும் இருக்குமா என்றும் ரசிகர்கள் குறிப்பிட்டு வருகின்றனர்.

Vijay sethupathi look from vikram link with old vikram movie

பகத் ஃபாசில் மற்றும் விஜய் சேதுபதி ஆகியோரின் கதாபாத்திரத்தின் பெயர் வெளியிடப்பட்டுள்ள நிலையில், விக்ரம் பெயரில் தான் கமல் வருகிறாரா அல்லது வேறு கதாபாத்திர பெயருடன் கமல் தோன்றுகிறாரா என்பது பற்றிய அறிவிப்பு வரலாம் என்ற எதிர்பார்ப்பிலும் ரசிகர்கள் உள்ளனர்.

Also Read | Behindwoods விருது மேடையில்.. சிங்கிள்ஸ் சார்பா, சன்னியிடம் கேட்ட கேள்வி.. வைரல் வீடியோ

தொடர்புடைய இணைப்புகள்

Vijay sethupathi look from vikram link with old vikram movie

People looking for online information on விஜய் சேதுபதி, Old vikram movie, Vijay Sethupathi, Vikram will find this news story useful.