''அவதூறு பேசுபவர்கள் பற்றி கவலைப்படாதீர்கள்'' - திருநங்கைகளுக்கு ராகவா லாரன்ஸ் வேண்டுகோள்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

ராகவா லாரன்ஸ் இயக்கி நடித்து கடந்த ஏப்ரல் 19 ஆம் தேதி வெளியான படம் காஞ்சனா 3. இந்த படத்தில் வேதிகா, ஓவியா, கோவை சரளா, சூரி, தேவதர்ஷினி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர்.

Raghava Lawrence release statement about his movie Kanchana 3

இந்த படத்தை ராகவேந்திரா புரொடக்ஷன், சன் பிக்சர்ஸ் நிறுவனங்கள் தயாரித்துள்ளது. இந்நிலையில் நடிகரும் இயக்குநருமான ராகவா லாரன்ஸ் தற்போது அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், ''காஞ்சனா 3' படத்தை மாபெரும் வெற்றிப் படமாக்கிய ரசிகர்களுக்கு மிக்க நன்றி. என் மீது அன்புள்ளவர்களுக்கு ஒரு வேண்டுகோள்...

என்னை பற்றியும் எனது சேவைகளை பற்றியும் அவதூறு பேசுவர்களை பற்றி கவலை படாதீர்கள். என் மீது அக்கறை உள்ள  ஒரு சில மாற்றுத்திறனாளிகளும் திருநங்கைகளும் போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் சம்மந்தப்பட்டவர் மீது புகார் அளிப்பதாக கேள்விப் பட்டேன். அப்படி எதுவும் செய்யாதீர்கள். பொறுமையை கடைபிடியுங்கள். நாம் நமது வழியில் நல்லதை மட்டும் நினைப்போம். நல்லதையே செய்வோம். அவர்கள், அவர்கள் வழியில் போகட்டும்.

எனக்கு ஒரு சின்ன பிரச்சனை என்றால் உடனே ஓடி வருகிற உங்கள் ஒவ்வொருவருக்கும் என் குடும்பத்தார் சார்பில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். நான் மும்பையில் 'காஞ்சனா' இந்தி படத்தின் படப்பிடிப்பில் இருக்கிறேன். படப்பிடிப்பு முடிந்து வந்தவுடன் ஒரு நல்ல முடிவு எடுப்போம். அது வரை அமைதி காப்போம். கடவுள் நமக்கான நல்லதை செய்வார்'' இவ்வாறு ராகவா லாரன்ஸ் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.