''நண்பன்னு சொன்னா அது விஜய் சார் மட்டும் தான்'' - தளபதி குறித்து பிரபல ஹீரோ

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தமிழில் வெளியான ஹாரர் - காமெடி என்ற ஜானரில் வெளியான படங்களில் முக்கியமானது 'காஞ்சனா' . அந்த படத்தின் இரண்டாம் பாகமும் ரசிகர்களின் வரவேற்பை பெற, தற்போது இந்த படத்தின் மூன்றாம் பாகம் 'காஞ்சனா 3' என்கிற பெயரில் உருவாகியுள்ளது.

Raghava Lawrence shares his Working experience with Thalapathy Kanchana 3

ராகவா லாரன்ஸ் இயக்கி நடித்துள்ள இந்த படத்தை அவருடன் இணைந்து சன் பிக்சர்ஸ் நிறுவனமும் தயாரித்துள்ளது. இந்த படத்தில் ராகவா லாரன்ஸ் உடன் வேதிகா, ஓவியா, கோவை சரளா, தேவதர்ஷினி, உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.

இந்த படம் வருகிற ஏப்ரல் 19 ஆம் தேதி வெளியாகிறது. இந்த படம் குறித்து Behindwoods Tvக்கு  பேட்டியளித்த லாரன்ஸ், ''விஜய்யை சந்திக்கும் போது என்னுடைய பையன் உங்களுடைய ஃபேன் என்று சொல்வார். திரையுலகில் எனக்கு அதிக நண்பர்கள் கிடையாது. எனக்கு நண்பன்னு சொன்னா அது விஜய் சார் மட்டும் தான். நண்பர் என்பதால் நான், உங்கள வச்சு டைரக்ட் பண்ணனும், புரொடியூஸ் பண்ணனும்னு பேச மாட்டேன்.

அவரும் நீங்க என் படத்துக்கு நடனம் அமைக்கனும், படம் டைரக்ட் பண்ணனும்னு கேட்கமாட்டார். நட்பு ரீதியாக மட்டுமே இருவரும் பேசுவோம். 'மேகமாய் வந்து போகிறேன்' பாடலில் இருந்து ரெண்டு பேருக்கும் நல்ல நட்பு. அவர் வளர்ந்து வரும் பாதையில் நாமளும் ஒரு ஆளாக இருந்திருக்கிறோம்'' என்றார்.

''நண்பன்னு சொன்னா அது விஜய் சார் மட்டும் தான்'' - தளபதி குறித்து பிரபல ஹீரோ வீடியோ