ராகவா லாரன்ஸ் இயக்கி, நடித்து ஏப்ரல் 19 ஆம் தேதி வெளியாகியிருக்கும் படம் 'காஞ்சனா 3' . 'காஞ்சனா' படங்களின் தொடர்ச்சியாக வெளியாகியிருக்கும் இந்த படத்தை ராகவேந்திரா புரொடக்ஷன் மற்றும் சன் பிக்சர்ஸ் ஆகிய நிறுவனங்கள் தயாரித்துள்ளன.

அதனைத் தொடர்ந்து ராகவா லாரன்ஸ், 'காஞ்சனா' படத்தின் முதல் பாகத்தை ஹிந்தியில் ரீமேக் செய்யவிருக்கிறார். இந்த படத்தில் அக்ஷய் குமார் ஹீரோவாக நடிக்க அவருக்கு ஜோடியாக கியாரா அத்வானி நடிக்கிறார். இந்த படத்தின் பாடல் படப்பிடிப்பு மும்பையில் தொடங்கி நடைபெறுகிறது.
இந்நிலையில் சன் பிக்சர்ஸ் நிறுவனம் ராகவா லாரன்ஸின் பணி செய்யும் விதம் பிடித்துள்ளதன் காரணமாக அவர் இயக்கத்தில் மீண்டும் ஒரு படத்தை தயாரிக்கவிரும்பியுள்ளது . இந்த படம் கால பைரவா என்ற பெயரில் பாம்புகளை மையமாக வைத்து இந்த படம் உருவாகவுள்ளதாம். இந்த படம் மிகப் பிரம்மாண்டமாக 3 டியில் உருவாகவுள்ளதாக கூறப்படுகிறது.