திக் திக் திகில் கிளப்பும் காஞ்சனா 3: சென்சார் ரிசல்ட் இதோ..!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகர் ராகவா லாரன்ஸ் இயக்கி, நடித்துள்ள ‘காஞ்சனா 3’ திரைப்படத்திற்கு சென்சாரில் ‘யு/ஏ’ சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. 

Raghava Lawrence starrer Kanchana 3 Censored and certified with U/A

ராகவா லாரன்ஸின் இயக்கத்தில் காமெடி கலந்த ஜாலியான பேய் படமாக வெளியாகி தமிழ் சினிமாவில் புது ட்ரெண்டை உருவாக்கிய திரைப்படம் ‘காஞ்சனா சீரிஸ்’. ‘முனி’, காஞ்சனா, காஞ்சனா 2 ஆகிய திரைப்படங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பு கிடைத்து பெரும் வெற்றியடைந்தது.

அதன் வரிசையில் தற்போது உருவாகி வரும் ‘காஞ்சனா 3’ திரைப்படத்தில் ஓவியா, வேதிகா, கோவை சரளா, ஸ்ரீமன், தேவதர்ஷினி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படம் கோடை விடுமுறையை முன்னிட்டு வரும் ஏப்.19ம் தேதி ரிலீசாகவுள்ளது.

இந்நிலையில், இப்படத்தின் பாடல்களும், டிரைலரும் ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை குவித்த நிலையில், இப்படத்தின் சென்சாரி ரிப்போர்ட் தற்போது வெளியாகியுள்ளது. சென்சாரில் ‘யு/ஏ’ சான்றிதழ் வழங்கப்பட்டுள்ள இப்படம் 2 மணி நேரம் 54 நிமிடங்கள் ஓடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.