தெலுங்கில் வெளியான ஓவியா - சிம்புவின் 90ML இசை

முகப்பு > சினிமா செய்திகள்

By |

ஓவியா நடிப்பில் கடந்த மார்ச் 1 ஆம் தேதி வெளியான படம் '90 ML'. இந்த படத்தை அழகிய அசுரா என்கிற அனிதா உதீப் இயக்கியிருந்தார். இந்த படத்துக்கு சிம்பு இசையமைத்திருந்தார்.  மேலும் இந்த படத்தில் சிம்பு சிறப்புத் தோற்றத்தில் தோன்றி அசத்தியிருந்தார்.

Oviya's 90ML telugu version Audio launch held in Hyderabad

பெண்களின் சுய உரிமை குறித்து பேசிய இந்த படம் கலவையான விமர்சனங்களை பெற்றது. இந்த படத்துக்கு அரவிந்த் கிருஷ்ணா ஒளிப்பதிவு செய்ய ஆண்டனி எடிட்டிங் செய்திருந்தார்.  இந்த படத்தை நவீஸ் எண்டர்டெயின்மென்ட் சார்பில் உதீப் தயாரித்திருந்தார்.

இந்நிலையில் தற்போது இந்த படம் தெலுங்கில் மொழிமாற்றம் செய்யப்பட்டு வெளியாகவிருக்கிறது.  இதன் ஒரு பகுதியாக இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா ஹைதராபாத்தில் இன்று நடைபெற்றது. இந்த விழாவில் இயக்குநர் அனிதா உதீப் உள்ளிட்ட படக்குழுவினர் கலந்துகொண்டு இசையை வெளியிட்டனர்.

Tags : Oviya, Simbu, Str, 90 ML