மிரட்டும் ‘காஞ்சனா 3’ உடன் அதிரடி ஆக்‌ஷன் சர்ப்ரைஸ் கொடுக்கும் விஷால்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

விஷால் நடித்துள்ள ‘அயோக்யா’ திரைப்படத்தின் டிரைலர், நாளை வெளியாகவிருக்கும் ராகவா லாரன்ஸின் ‘காஞ்சனா 3’ திரைப்படத்துடன் வெளியாகவிருக்கிறது.

Vishal's Ayogya Trailer will be releasing along with Kanchana 3 in theatres from tomorrow

தெலுங்கில் ஜூனியர் என்.டி.ஆர் நடிப்பில் வெளியாகி சூப்பர் டூப்பர் ஹிட்டடித்த ‘டெம்பர்’ திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ ரீமேக்காக விஷால் நடிப்பில் ‘அயோக்யா’ திரைப்படம் உருவாகியுள்ளது. 

இயக்குநர் வெங்கட் மோகன் இயக்கத்தில் விஷால் நடித்துள்ள ‘அயோக்யா’ திரைப்படத்தில் ராஷி கண்ணா, பார்த்திவன், கே.எஸ்.ரவிக்குமார், சச்சு, வம்சி கிருஷ்ணா, சோனியா அகர்வால், ஆர்ஜே பாலாஜி உள்பட பலர் நடித்துள்ளனர்.

‘விக்ரம் வேதா’ புகழ் சாம் சிஎஸ் இசையமைத்துள்ள இப்படத்திற்கு விஷ்ணு ஒளிப்பதிவும், ஸ்ரீகர் பிரசாத் படத்தொகுப்பும் செய்கிறார். லைட் ஹவுஸ் மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்தின் அதிரடி ஆக்‌ஷன் டிரைலர், நடிகர் ராகவா லாரன்ஸ் நடிப்பில் நாளை வெளியாகவிருக்கும் ‘காஞ்சனா 3’ திரைப்படத்துடன் திரையரங்குகளில் ரிலீசாகவிருப்பதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ராகவா லாரன்ஸ் நடித்து, இயக்கியிருக்கும் ‘காஞ்சனா 3’ திரைப்படம் நாளை (ஏப்.19) உலகம் முழுவதும் வெளியாகவிருக்கிறது. காமெடி கலந்த ஹாரர் ஜானரில் இதுவரை வெளியான ‘காஞ்சனா’ சீரிஸ் திரைப்படங்கள் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பெரும் வரவேற்பை பெற்றது.

அந்த வரிசையில் தற்போது வெளியாகவிருக்கும் ‘காஞ்சனா 3’ திரைப்படத்தின் மீதும் கூடுதல் எதிர்ப்பார்ப்பு நிலவுகிறது. மேலும், விஷால் நடித்துள்ள ‘அயோக்யா’ திரைப்படம் வரும் மே.10ம் தேதி உலகம் முழுவதும் ரிலீசாகவுள்ளது.