'முத்து', 'படையப்பா', 'அவ்வை சண்முகி', 'பஞ்ச தந்திரம்' என தமிழ் சினிமாவின் முன்னணி நடசத்திரங்களான ரஜினி, கமல் ஆகியோரைக் கொண்டு சூப்பர் ஹிட் படங்களை கொடுத்தவர் கே.எஸ்.ரவிக்குமார். இவர், விஜய்யை வைத்து 'மின்சாரக்கண்ணா', அஜித்தை வைத்து 'வில்லன்', 'வரலாறு' ஆகிய படங்களையும் இயக்கியுள்ளார்.

தமிழ் மட்டுமல்லாது தெலுங்கு கன்னடம் ஆகிய மொழிகளிலும் படங்களை இயக்கியுள்ளார். தெலுங்கில் பாலகிருஷ்ணாவை வைத்து 'ஜெய் சிம்ஹா', என்ற படத்தை இயக்கியிருந்தார். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.
அதனைத் தொடர்ந்து பாலகிருஷ்ணாவை வைத்து மீண்டும் ஒரு படம் இயக்கவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. இந்த படம் ஜூலை முதல் துவங்கும் எனவும் கூறப்படுகிறது.
பாலகிருஷ்ணா முன்னதாக அவரது தந்தையும், நடிகருமான என்டிஆரின் வாழ்க்கை வரலாற்றுப்படமான 'என்டிஆர் கதாநாயகுடு', 'என்டிஆர் மகாநாயகுடு' உள்ளிட்ட படங்களில் நடித்திருந்தார்.