ராகவேந்திரா புரொடக்ஷன் மற்றும் சன் பிக்சர்ஸ் இணைந்து தயாரித்து தற்போது திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கும் படம் 'காஞ்சனா 3'. இந்த படத்தை ராகவா லாரன்ஸ் இயக்கியுள்ளார்.
![Raghava Lawrence And Oviya's Kanchana 3 promo video is here Raghava Lawrence And Oviya's Kanchana 3 promo video is here](https://tamil.behindwoods.com/tamil-movies-cinema-news-ta/images/raghava-lawrence-and-oviyas-kanchana-3-promo-video-is-here-photos-pictures-stills.jpg)
இந்த படத்தில் ராகவா லாரன்ஸ் உடன் வேதிகா, ஓவியா, கோவை சரளா, சூரி, தேவதர்ஷினி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஹாரர் காமெடி என்ற ஜானரில் உருவான இந்த படத்துக்கு தமன் பின்னணி இசையமைத்துள்ளார். சுஷில் சௌத்ரி, வெற்றி ஆகியோர் இந்த படத்துக்கு ஒளிப்பதிவு செய்துள்ளனர்.
இந்நிலையில் இந்த படத்தின் புதிய புரோமோ வீடியோ தற்போது வெளியாகியுள்ளது. அதில் ராகவா லாரன்ஸ், 'நல்லவன் தான். ஆனா கெட்டவனா மாத்திட்டாங்களே' என்பது போன்ற மாஸ் வசனங்கள் பேசுகிறார்.
''அதுவும் ஜாலியா தான் இருக்கு'' - ராகவா லாரன்ஸின் காஞ்சனா 3 வீடியோ இதோ வீடியோ