'காஞ்சனா' படத்துக்கு கிடைத்த வரவேற்புக்கு பிறகு 'காஞ்சனா 2', 'காஞ்சனா 3' என்று அடுத்தடுத்த பாகங்களை ராகவா லாரன்ஸ் வெளியிட்டுவருகிறார்.

இந்நிலயைில் 'காஞ்சனா' படத்தின் ஹிந்தி பதிப்பை அக்ஷய் குமாரை நாயகனாக வைத்து ராகவா லாரன்ஸ் இயக்கவிருப்பதாக அறிவித்துள்ளார். இந்த படத்தில் அக்ஷய் குமாருக்கு ஜோடியாக 'எம்.எஸ்.தோனி' படப் புகழ் கியாரா அத்வானி நடிக்கவிருக்கிறாராம்.
'லக்ஷ்மி' எனப் பெயரிடப்பட்டுள்ளதாக கூறப்படும் இந்த படத்தின் பாடல் காட்சிக்கான ஷூட்டிங் தொடங்கி நடைபெற்றுவருவதாக தகவல்கள் கிடைத்துள்ளன. இந்த படத்துக்கு பாஸ்கோ சீஸர் நடனம் அமைத்து வருவதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளன.