"நிர்வாணமா நடிக்க மாட்டேன்!"... பிரபல பிக்பாஸ் நடிகை போட்ட 'பளார்' கண்டீஷன்...!
முகப்பு > சினிமா செய்திகள்ந்தியில் பிக்பாஸ் சீசன் 10 மூலம் பிரபலமடைந்தவர் நடிகை மோனாலிசா. ஹிந்தியில் 'நசர்' என்ற தொடரில் நடித்து வந்தார். இந்த தொடர் தமிழில் விஜய் டிவி-யில் 'அதே கண்கள்' என்ற பெயரில் ஒளிபரப்பானது. தற்போது அந்த தொடர் முடிவடைந்திருக்கும் நிலையில் அடுத்த வாய்ப்புக்காக அவர் காத்திருக்கிறார்.

அவர் அளித்திருக்கும் பேட்டியில் "நசர் தொடரின் ஆரம்பத்தில் எனக்கு மிக சிறிய கதாபாத்திரமே கொடுக்கப்பட்டது. பின்பு ரசிகர்கள் எனக்கு அளித்த ஆதரவை பார்த்து ஒன்று மற்றும் இரண்டு சீசன்களில் என்னுடைய ரோல் அதிகரிக்கப்பட்டது. எனவே எனது நடிப்புத் திறமையை பார்த்தவர்கள் எனக்கு வாய்ப்பு தருவீர்கள் என்று நம்புகிறேன். வெப் சீரிஸிலும் நடிக்க தயாராக இருக்கிறேன்" என்று கூறியுள்ளார்.
தற்போது வெப்சீரிஸ்களில் அதிகரித்து வரும் நிர்வாண ரோல்கள் குறித்து கேட்கப்பட்ட போது "உண்மையை சொல்ல வேண்டுமென்றால், நான் நிர்வாணமாக நடிக்க விரும்பவில்லை. சில நடிகைகள் நிர்வாணமாகவும் நடித்துள்ளனர். ஆனால் அது நேர்த்தியாக படமாக்கப்படும் போது மட்டுமே வக்கிரம் இல்லாமல் இருக்கும். எனவே நான் அப்படி நடிக்க விருப்பமில்லை" என்று கூறியுள்ளார்.