அஜித்தின் விஸ்வாசம் - 'இது அம்மா - பையன் வெர்ஷன்'.! - பிக்பாஸ் நடிகை எமோஷனல் வீடியோ.

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பிக்பாஸ் புகழ் நடிகை ரேஷ்மா தனது மகனுடன் எமோஷனலான வீடியோவை பகிர்ந்துள்ளார். 

பிக்பாஸ் நடிகையும் மகனும் எமோஷனல் வீடியோ | biggboss fame actress reshma pasupuleti shares an emotional video with her son

விஷ்ணு விஷால் நடிப்பில் எழில் இயக்கிய வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன் படத்தில் நடித்தவர் ரேஷ்மா பசுப்புலெட்டி. இத்திரைப்படத்தில் இவரது புஷ்பா கதாபாத்திரத்தில் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. இதையடுத்து இவர் பிக்பாஸ் போட்டியில் கலந்து கொண்டு மேலும் பிரபலமானார். 

இந்நிலையில் ரேஷ்மா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் எமோஷனலான வீடியோ ஒன்றை பகிர்ந்துள்ளார். அவரது மகன் அவருக்கு காபி போட்டு எடுத்து வந்து கொடுக்கும் வீடியோவை விஸ்வாசம் கண்ணான கண்ணே பாடலுடன் இணைத்து அவர் பதிவிட்டுள்ளார். மேலும், ''இது எனது மகன் ராகுல். கடந்த இரண்டு தினங்கள் எனக்கு ரொம்பவே கடினமான ஒன்றாக இருந்தது. அதனால் என்னை ஆச்சர்யப்படுத்தி, மீண்டும் சிரிக்க வைக்க அவன் இப்படி செய்திருக்கிறான்'' என மகனின் பாச செயல் குறித்து பதிவிட்டிருக்கிறார். ரேஷ்மா வெளியிட்ட இந்த வீடியோ ரசிகர்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

 

Entertainment sub editor