மகளின் அன்பால் நெகிழ்ந்து போன வனிதா விஜயகுமார்.! -''வெறுப்பை காட்டுறவங்களுக்கு ஒரு விஷயம்..''
முகப்பு > சினிமா செய்திகள்நடிகை வனிதா விஜயகுமார் இன்ஸ்டாகிராமில் அவரது மகளின் பதிவை கண்டு நெகிழ்ச்சியடைந்துள்ளார்.

தமிழ் சினிமாவின் மூத்த நடிகர் விஜயகுமாரின் மகள் வனிதா விஜயகுமார். இவர் தமிழில் சந்திரலேகா, மாணிக்கம் உள்ளிட்ட படங்களில் நடித்தார். இதையடுத்து விஜய் டிவியின் பிக்பாஸ் போட்டியில் கலந்து கொண்டு இவர் மீண்டும் ரீ-என்ட்ரி கொடுத்தார். இதை தொடர்ந்து சீன்னதிரை சீரியல்கள், ரியாலிட்டி ஷோக்களில் கலக்கி தற்போது இவர் கலக்கி வருகிறார்.
இந்நிலையில் வனிதா விஜயகுமார் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவரது மகள் ஜோவிகாவின் பதிவை கண்டு நெகிழ்ச்சியடைந்துள்ளார். அவரது மகள் தனது பதிவில், ''எனக்கு இப்படியோர் அருமையான வாழ்க்கையை அமைத்து கொடுத்த என் அம்மாவுக்கு நான் நன்றி சொல்லி கொள்கிறேன். அவரை நான் அளவுக்கதிகமாக நேசிக்கிறேன். எல்லோரும் அம்மாவின் சொல்லை கேளுங்கள், அதை நம்புங்கள். அம்மாவுக்கு தெரியும், எது சரி என்று. அவரை குறைத்து மதிப்பிடாதீர்கள். வெறுப்பை காட்டுபவர்களுக்கு ஒன்று சொல்லி கொள்கிறேன், நீங்கள் அதை செய்து கொண்டே இருங்கள், ஆனால் நான் என் அம்மாவின் பக்கம் உறுதியாக நின்று, அவருக்கு துணையாக இருப்பேன். கவலைப்படாதீங்க அம்மா, என்ன நடந்தாலும், நான் உங்களுடன் நிற்பேன். தனி ஆளாக நீங்க இந்த உயரத்திற்கு வந்திருக்கிறீர்கள். அதை நான் கூட இருந்து பார்த்திருக்கிறேன். எப்போதுமே நீங்கள் ஒரு போராளிதான். லவ் யூ அம்மா'' என உருக்கமாக பதிவிட்டிருந்தார். இதை வனிதா விஜயகுமார் நெகிழ்ச்சியாக தனது பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.