'நரகத்துல கூட இப்படிதான் இருக்கனுமாம்..!' - பிக்பாஸ் லாஸ்லியாவின் சூப்பர் கூல் க்ளிக்.
முகப்பு > சினிமா செய்திகள்நடிகை லாஸ்லியா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு புதிய போட்டோவை பகிர்ந்துள்ளார்.

இலங்கையில் தமிழ் செய்தி வாசிப்பாளராக இருந்தவர் லாஸ்லியா. இவர் விஜய் டிவியின் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று பிரபலமானார். இதையடுத்து லாஸ்லியா ஆர்மி என அவருக்கான ரசிகர்கள் உருவாயினர். இவர் தற்போது ஹர்பஜன் சிங் நடிக்கும் ஃப்ரெண்ட்ஷிப் மற்றும், ஆரி அர்ஜுனா நடிக்கும் படத்திலும் நடித்து வருகிறார்.
இந்நிலையில் லாஸ்லியா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு போட்டோவை வெளியிட்டுள்ளார். அவரது பழைய புகைப்படத்தை throwback-ஆக பகிர்ந்துள்ள அவர், அத்துடன், ''நரகத்தில் கூட ராணியாக இருங்கள்'' என்றும் பதிவிட்டுள்ளார். இதற்கு முன்னர், 'நான் இன்ஸ்டாகிராமில் போடும் பதிவுகள் என்னை பற்றியது. எனக்கு பின்னால் பேசுவது பிடிக்காது' என பதிவிட்டிருந்தார் லாஸ்லியா. தற்போது அவரது இந்த சூப்பர் கூல் பதிவு ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.