உலக நர்ஸ் தினம் - பிக்பாஸ் ஜூலி வெளியிட்ட போட்டோவை பாத்தீங்களா..? ஆளே அடையாளம் தெரியலயே..!
முகப்பு > சினிமா செய்திகள்உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. இந்தியாவில் அதன் பரவலை தடுக்க பிரதமர் மோடி வரும் 17ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவிட்டுள்ளார். மக்கள் அனைவரும் வீட்டில் முடங்கி இருக்கின்றனர். இந்த நேரத்தில் மக்களை பாதுகாப்பாக வைத்திருக்க பெரும் பங்காற்றுபவர்கள் மருத்துவர்கள், செவிலியர்கள், தூய்மைப் பணியாளர்கள் மற்றும் காவல்துறையினர் தான்.

இன்று உலக செவிலியர் தினம் கொண்டாடப்படுகிறது. மக்கள் அனைவரும் உயிர் காக்கும் தேவதைகளுக்கு வாழ்த்து சொல்லி வருகின்றனர். அந்த வகையில் பிக்பாஸ் மூலம் பிரபலம் அடைந்தவர் ஜூலி. பின்பு சில படங்களில் நடித்தார். இவர் அதற்கு முன்பு செவிலியராக பணியாற்றியது நம் அனைவருக்கும் தெரியும். இந்த ஸ்பெஷல் தினத்தில் ஜூலி தான் செவிலியராக இருந்த போது எடுத்த புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.
Happy international nurses day to all the ambitious nurses in the world #InternationalNursesDay pic.twitter.com/6ZwQk0AQy6
— எம் ஜூலி (M JULEE) (@lianajohn28) May 12, 2020