''இந்த குட்டி பாப்பாதான் இப்போ சென்சேஷனல் ஹீரோயின்'' - பிக்பாஸ் நடிகையின் ஏலியன் லெவல் போட்டோ.
முகப்பு > சினிமா செய்திகள்ட்விட்டரில் பிக்பாஸ் நடிகை வெளியிட்டுள்ள சிறுவயது போட்டோ ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.

பிக்பாஸ் போட்டியில் பங்கேற்று பிரபலமடைந்தவர் ரைசா வில்சன். இதையடுத்து இவர் ஹரிஷ் கல்யாண் ஜோடியாக பியார் ப்ரேமா காதல் படத்தில் நடித்து ரசிகர்களை கவர்ந்தார். இதனிடையே இவர் நடித்துள்ள அலைஸ், எஃப்.ஐ.ஆர் உள்ளிட்ட திரைப்படங்கள் ரிலீஸுக்காக காத்திருக்கின்றன.
இந்நிலையில் ரைசா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு போட்டோவை பகிர்ந்துள்ளார். தனது சிறுவயது போட்டோவையும் ஏலியன் போட்டோவை சேர்ந்து பதிவிட்டுள்ள அவர், ''ரெண்டும் ஒண்ணுதான், ஆனா வேற'' என பதிவிட்டிருக்கிறார். ரைசாவின் இந்த சிறுவயது புகைப்படம் ரசிகர்களின் லைக்ஸை குவிப்பதோடு வைரலாகி வருகிறது.
Same same but different 😂 #twinning pic.twitter.com/Bj6CcJRL8u
— Raiza Wilson (@raizawilson) May 13, 2020
Tags : Raiza, BIGGBOSS TAMIL