பிக்பாஸ் தர்ஷன் வெளியிட்ட Stronger-ஆன பதிவு..! ''தோல்வி என்ன கொடுக்கும் தெரியுமா.?"
முகப்பு > சினிமா செய்திகள்நடிகர் தர்ஷன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு வலிமையான பதிவை வெளியிட்டுள்ளார்.

பிக்பாஸ் போட்டியில் பங்கேற்று தமிழகமெங்கும் பிரபலமானவர் தர்ஷன். இப்போட்டியில் இவரது துறுதுறுவென்ற பேச்சு ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. இதையடுத்து ஒரு சில விளம்பரப் படங்களில் நடித்த இவர், படங்களில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.
இந்நிலையில் தர்ஷன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புதிய போட்டோவை பகிர்ந்துள்ளார். ''தோல்வி உங்களை கொன்று விடாது, ஏதோ ஒன்றை சாதிப்பதற்கான ஆசையை அது கொடுக்கும்'' என பதிவிட்டுள்ள அவர், தனது லேட்டஸ்ட் புகைப்படத்தையும் பகிர்ந்துள்ளார். தர்ஷனின் இந்த பதிவு ரசிகர்களை வெகுவாக கவர்ந்து லைக்ஸை குவித்து வருகிறது.
Tags : BiggBoss Tharshan