'பிக்பாஸ் நடிகை வெளியிட்ட ஸ்கூல் க்ரூப் போட்டோ' - இதுல அவங்க யாருன்னு தெரியுதா.?
முகப்பு > சினிமா செய்திகள்பிக்பாஸ் போட்டியில் பங்கேற்ற நடிகை தனது ஸ்கூல் க்ரூப் போட்டோவை பகிர்ந்துள்ளார்.

தமிழ் சினிமாவில் வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடித்து வருபவர் காஜல் பசுபதி. கோ, மௌனகுரு, இரும்பு குதிரை உள்ளிட்ட படங்களில் இவரது வித்தியாசமான நடிப்பு ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. இதையடுத்து இவர் பிக்பாஸ் போட்டியில் கலந்து கொண்டு மேலும் பிரபலமானார்.
இந்நிலையில் காஜல் பசுபதி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு போட்டோவை வெளியிட்டுள்ளார். தனது பள்ளிப்பருவத்தில் எடுக்கப்பட்ட ஸ்கூல் க்ரூப் போட்டோவை அவர் பகிர்ந்துள்ளார். ''பத்தாம் வகுப்பு நினைவுகள்.. இதில் என்னை கண்டுபிடிக்க முடிகிறதா.? எப்படி இருக்கேன்.?" என அவர் பதிவிட்டுள்ளார். காஜலின் இந்த பதிவை கண்ட ரசிகர்கள், அவரை சரியாக கண்டுபிடித்து கமன்ட் அடித்து வருகின்றனர்.