யாரு நம்ம கவினா இது? லயோலா கல்லூரியில் படிக்கும்போது எப்படி இருந்திருக்கிறார் பாருங்க!
முகப்பு > சினிமா செய்திகள்உலகம் முழுவதும் கொரோனா நோய் வேகமாக பரவி வருகிறது. மக்கள் அனைவரும் வீட்டில் முடங்கி இருக்கின்றனர். பிரபலங்களுக்கும் அதே நிலைமை தான். பலரும் சமூக வலைத்தளங்கள் மூலம் ரசிகர்களுடன் உறவாடி வருகின்றனர். அப்படி ஆரம்பம் முதலே ஆக்டிவாக இருப்பவர் நடிகர் கவின்.

பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் நடிகர் கவின். அவர் சரவணன் மீனாட்சி தொடரில் நடித்தபோதே அவருக்கு ஏராளமான ரசிகர்கள் இருந்தனர். பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் அந்த கூட்டம் வெகுவாக பெருகியது. தற்போது கவின் 'லிப்ட்' என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு கொரோனா காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது கல்லூரி புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். நடிகர் கவின் சென்னையில் உள்ள லயோலா கல்லூரியில் படித்தவர். யாரு நம்ம கவினா இது? என்று கேட்கும் அளவிற்கு அந்த புகைப்படம் இருக்கிறது. இந்தப் புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.