பிக்பாஸ் நடிகையின் மிரட்டலான போட்டோஷூட்.! - விழிப்புணர்வுக்காக இப்படி பண்றாங்களாம்.!!
முகப்பு > சினிமா செய்திகள்பிக்பாஸ் போட்டியில் கலந்து கொண்ட நடிகை வெளியிட்டுள்ள புதிய புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

தமிழ் சினிமாவில் இளம் கதாநாயகியாக கலக்கி வருபவர் பிந்து மாதவி. கேடிபில்லா கிள்ளாடி ரங்கா, தேசிங்கு ராஜா உள்ளிட்ட படங்களில் நடித்து இவர் பிரபலமானார். மேலும் இவர் பிக்பாஸ் போட்டியிலும் பங்கேற்று ரசிகர்களை கவர்ந்தார். இவர் தற்போது ரஞ்சித் ஜெயக்கொடி இயக்கத்தில் யாருக்கும் அஞ்சேல் எனும் படத்தில் நடித்துள்ளார்.
இந்நிலையில் பிந்து மாதவி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவரது லேட்டஸ்ட் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். ப்ளாஸ்டிக் கவருக்குள் இருந்தபடி, அவர் நடித்தியிருக்கும் இந்த போட்டோஷூட், ப்ளாஸ்டிக் பயன்பாட்டுக்கு எதிரான விழிப்புணர்வு என தெரிவித்திருக்கிறார். இந்த லாக்டவுன் நேரத்தில், ப்ளாஸ்டிக் பயன்பாட்டை தவிர்க்க முயற்சி எடுப்போம் எனவும் அவர் தெரிவித்துள்ளார். பிந்து மாதவியின் இந்த புதிய புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.