20 வருஷம் ஆச்சு.. ஆனாலும் மறக்க முடியல..! பிரபலம் சொல்லும் அஜித் பற்றிய மெமரி ஸ்டோரி.

முகப்பு > சினிமா செய்திகள்

By |

அஜித் நடித்த முகவரி படத்தை குறித்து இந்தியாவின் லெஜன்ட்ரி ஒளிப்பதிவாளர் அழகான கருத்து ஒன்றை தெரிவித்துள்ளார்.

அஜித்தின் முகவரி பி.சி.ஶ்ரீராம் நெகிழ்ச்சி | PC Sreeram's memorable note on Ajith's Mugavari

அஜித் நடிப்பில் 2000-ஆம் வெளியான திரைப்படம் முகவரி.  இத்திரைப்படத்தை வி.இசட்.துரை இயக்கினார். ஜோதிகா கதாநாயகியாக நடிக்க, ரகுவரன், மணிவண்ணன், கே.விஸ்வநாத் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தனர். இசையமைப்பாளர் ஆகும் கனவு கொண்ட ஒரு இளைஞனின் போராட்டத்தை மையமாக கொண்டு இத்திரைப்படம் உருவானது.

இந்நிலையில் முகவரி வெளியாகி இன்றோடு 20 வருடம் நிறைவடைகிறது. இதையடுத்து முகவரி படத்தின் ஒளிப்பதிவாளர் பி.சி.ஶ்ரீராம் படம் குறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். அவர் கூறியதாவது, '20 வருடங்களுக்கு முன் முகவரி ரிலீஸ் ஆனது. முதல் நாளில் இருந்தே வி.இசட்.துரையின் திரைக்கதையும் அருமையான நடிப்பும் இந்த படத்தை மறக்க முடியாத ஒன்றாக மாற்றி இருக்கிறது. இன்று வரை ஆல் டைம் ஃபேவரைட்டாக முகவரியை கொண்டாடும் சோஷியல் மீடியாவுக்கு நன்றி. அஜித் மற்றும் ஜோதிகாவுடன் சேர்ந்து ரகுவரன், கே.விஸ்வநாத்தின் நடிப்பு அனைவரையும் வசீகரித்தது' என அவர் தெரிவித்துள்ளார்.

Entertainment sub editor