அருண் விஜய் உருக்கமான பதிவு - ''இந்த நாளை அவ்வளவு சீக்கிரம் மறக்க முடியாது, காரணம்...''

முகப்பு > சினிமா செய்திகள்

By |

அருண் விஜய் நடிப்பில் 'மாஃபியா' திரைப்படம் பிப்ரவரி 21 ஆம் தேதி வெளியாகவுள்ளது. லைக்கா புரொடக்ஷன்ஸ் தயாரித்துள்ள இந்த படத்தை கார்த்திக் நரேன் இயக்கியுள்ளார். இந்த படத்தின் டிரெய்லர் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

Arun Vijay about Thala Ajith kumar, Gautham Menon and Yennai Arinthaal

இந்த படத்தில் அருண் விஜய்க்கு ஜோடியாக பிரியா பவானிஷங்கர் நடிக்க, பிரசன்னா முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். இந்த படத்துக்கு ஜேக்ஸ் பிஜோய் இசையமைக்க, கோகுல் பினோய் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

இந்நிலையில் அருண் விஜய் தனது ட்விட்டர் பக்கத்தில், என்னை அறிந்தால் 5 வருடங்கள் நிறைவடைந்தது குறித்து பதிவிட்டுள்ளார். அதில், ''இந்த நாள் என் வழியை மாற்றியது. அந்த நாள் விக்டர் வந்தான்.  என்னை விக்டர் வேடத்தை செய்ய வைத்ததற்கு கௌதம் மேனன் சாருக்கு நன்றி. மற்றும் தல அஜித் சார் என்னுடன் இனிமையாக பழகியதற்கு நன்றி'' என்று குறிப்பிட்டுள்ளார்.

Entertainment sub editor