தல அஜித் ’நேர்கொண்ட பார்வை படத்துக்குப் பிறகு ஹெச். வினோத்தின் இயக்கத்தில் நடித்துவரும் வலிமை பட படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. பிரபல பாலிவுட் தயாரிப்பாளரும், ஸ்ரீதேவியின் கணவருமான போனி கபூர் இந்த படத்தை தயாரித்து வருகிறார்.

இந்நிலையில் கடந்த ஜனவரி 18ம் தேதி பொங்கல் சிறப்பு நிகழ்ச்சியாக சன் டிவி, அஜித்தின் விஸ்வாசம் படத்தை ஒளிபரப்பியது. இதையடுத்து இந்த படத்தை தொலைக்காட்சியில் பார்த்தவர்கள் குறித்த புள்ளிவிவரத்தை சன் டிவி வெளியிட்டுள்ளது. அதில் விஸ்வாசம் 15,591 டெலிவிஷன் ரேட்டிங் பெற்று முதலிடத்தை பிடித்துள்லது. இதே போல 19ம் தேதி ஒளிபரப்பப்பட்ட ’பேட்ட’ திரைப்படம் 2வது இடத்தையும், ரோஜா தொலைக்காட்சி தொடர் மூன்றாவது இடத்தையும் பிடித்துள்ளது.
Tags : Ajith Kumar