BREAKING: தல அஜித்தின் ’வலிமை’ – இவ்ளோ சைலண்டா நடக்கும் ஷூட்டின் சீக்ரட் இது தான்!
முகப்பு > சினிமா செய்திகள்'நேர்கொண்ட பார்வை' படத்துக்குப் பிறகு தல அஜித் ஹெச்.வினோத்துடன் மீண்டும் இணையும் படத்துக்கு வலிமை என பெயர் சூட்டியிருப்பது யாவரும் அறிந்ததே. இந்த படத்தில் அஜித்துக்கு ஜோடியாக நடிக்கும் நடிகை குறித்து பல்வேறு கணிப்புகள் இணையத்தில் உலவி வந்தன.

ஆனால், அதிகாரப்பூர்வமாக இன்னும் யாரும் உறுதி செய்யப்படவில்லை. நடிகை ஸ்ரீதேவியின் கணவரும் தயாரிப்பாளருமான போனி கபூர் இந்த திரைப்படத்தை தயாரிக்க, யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார்.
மிகவும் சைலண்டாக நடந்து வரும் இந்த படத்தின் படப்பிடிப்பு பற்றி எந்த வித தகவலும் கசிந்து விடாமல் படக்குழுவினர் எச்சரிக்கையுடன் படப்பிடிப்பு நடத்தி வரும் நிலையில் தற்போது படத்தின் ஷூட் கோகுலம் ஸ்டுடியோவில் சத்தமில்லாமல் நடைபெற்று வருவதாக தகவல் கிடைத்துள்ளது.
Tags : Ajith Kumar, H Vinoth, Yuvan Shankar Raja, Valimai