அஜித்தின் 'வலிமை' படத்தில் இணையும் 'வட சென்னை' பிரபலம்
முகப்பு > சினிமா செய்திகள்By Aswin | Dec 29, 2019 06:42 PM
’விஸ்வாசம்’, ’நேர்கொண்ட பார்வை’ படத்துக்கு பிறகு ஹெச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடிக்கும் படத்துக்கு 'வலிமை' என்று பெயர் சூட்டி உள்ளனர்.

போனி கபூர் தயாரிக்கும் இப்படத்துக்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். பில்லா, மங்காத்தா, ஆரம்பத்துக்கு பிறகு யுவன் ஷங்கர் ராஜா அஜித்துடன் கூட்டணி சேர்ந்திருப்பது ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. நீரவ் ஷா இப்படத்துக்கு ஒளிப்பதிவு செய்கிறார்.
இந்நிலையில் இப்படத்தில் நடிப்பவர் பற்றி ஒரு முக்கிய தகவல் கிடைத்துள்ளது. வட சென்னை படத்தில் சிவா என்ற கதாப்பாத்திரத்தில் நடித்த பாவெல் நவகீதன் இப்படத்தில் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். இவர் ’மெட்ராஸ்’ படத்தில் இதற்கு முன் நடித்திருப்பதும், வி1 மர்டர் கேஸ் என்ற க்ரைம் திரில்லர் படத்தை இயக்கியிருப்பதும் குறிப்பிடத்தக்கது.
Tags : Ajith Kumar, Pavel Navageethan, Valimai