'நேர்கொண்ட பார்வை'க்கு கிடைத்த வரவேற்புக்கு பிறகு தல அஜித், H.வினோத் இயக்கத்தில் 'வலிமை' படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை Bayview Projects LLP சார்பாக போனி கபூர் இந்த படத்தை தயாரித்து வருகிறார்.

இந்த படத்துக்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்க, நீரவ் ஷா இந்த படத்துக்கு ஒளிப்பதிவு செய்து வருகிறார். இந்த படத்தில் மெட்ராஸ் வட சென்னை உள்ளிட்ட படங்களில் நடித்த பாவெல் நவகீதன் முக்கிய வேடத்தில் நடிக்கிறாராம்.
இந்நிலையில் இந்த படத்தில் முக்கிய வேடத்தில் பிரபல நடிகர் பிரசன்னா நடிக்கவிருப்பதாக தகவல் பரவியது. இதனையடுத்து ரசிகர் ஒருவர் ட்விட்டரில் நடிகர் பிரசன்னாவை குறிப்பிட்டு வலிமை படத்தில் நடிக்கிறீர்களா என்று கேள்வி எழுப்பியிருந்தார். அதற்கு பதிலளித்த பிரசன்னா, இன்னும் இல்ல புரோ. உறுதியாகவில்லை'' என்று பதிலளித்தார்.
நடிகர் பிரசன்னாவின் நடிப்பில் தற்போது அருண் விஜய்யுடன் இணைந்து 'மாஃபியா', மிஷ்கின் இயக்கத்தில் விஷாலுடன் இணைந்து 'துப்பறிவாளன் 2' உள்ளிட்ட படங்கள் அடுத்தடுத்து உருவாகி வருவது குறிப்பிடத்தக்கது.
Not yet bro. Waiting for confirmation .
— Prasanna (@Prasanna_actor) January 18, 2020