தல அஜித்தின் மகளுக்காக களமிறங்கிய ரசிகர்கள் - நேஷனல் லெவல் டிரெண்ட்
முகப்பு > சினிமா செய்திகள்By Karthikeyan S | Jan 03, 2020 11:42 AM
'நேர்கொண்ட பார்வை' படத்துக்கு கிடைத்த வரவேற்புக்கு பிறகு தல அஜித் தற்போது 'வலிமை' படத்தில் நடித்து வருகிறார். போனி கபூர் தயாரிக்கும் இந்த படத்தை வினோத் இயக்குகிறார்.

யுவன் ஷங்கர் ராஜா இந்த படத்துக்கு இசையமைக்க, நீரவ் ஷா இந்த படத்துக்கு ஒளிப்பதிவு செய்கிறார். இந்த படத்தில் 'மெட்ராஸ்', 'குற்றம் கடிதல்', 'வட சென்னை' உள்ளிட்ட படங்களில் நடித்த பாவேல் நவகீதன் இந்த படத்தில் முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார்.
இந்நிலையில் தல அஜித்தின் மகள் அனோஷ்காவின் பிறந்தநாள் என்பதால் ரசிகர்கள் HBDAnoushkaAjith என்ற ஹேஷ்டேக்கை உருவாக்கி டிரெண்ட் செய்து வருகிறார்கள். இந்த ஹேஷ்டேக் நேற்று தேசிய அளவில் டிரெண்டிங்கில் இருந்தது.
Tags : Ajith Kumar, Anoushka