ஆர்ஜேவாக ரசிகர்களை வித்தியாசமான அதே நேரம் சற்ற ஹியூமராகவும் நிகழச்சிகளை தொகுத்து வழங்கி ரசிகர்களை கவர்ந்தவர் ஆர்ஜே பாலாஜி. அதனைத் தொடர்ந்து காமெடி நடிகராக தமிழ் சினிமாவை கலக்கினார்.

இந்நிலையில் எல்கேஜி படத்தில் முதன்மை வேடத்தில் நடித்த அவர், அந்த படத்தில் நடப்பு அரசியலில் இருக்கும் பிரச்சனைகளை பேசி கவனம் ஈர்த்தார். அந்த படத்துக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.
இந்நிலையில் சமீபத்தில் நடைபெற்ற Behindwoods Gold Medals விருது வழங்கும் விழாவில் கலந்து கொண்ட அவருக்கு Best Wholesome Performer விருது வழங்கப்பட்டது. அப்போது பேசிய அவர் விஜய் ரசிகர்களுக்கு அப்டேட் வழங்கினார். அப்போது பேசிய அவர் மூக்குத்தி அம்மன் ஷூட்டிங்கில் இருந்து இங்க வந்துருக்கேன். இங்கே நிறைய விஜய் சார் ஃபேன்ஸ் இருக்கீங்க.
நான் இங்க இருக்குறதுக்கு காரணமே மாஸ்டர் படம் தான். இன்னக்கி என் படத்துல ஒரு ஃபைட் இருந்தது. ஃபைட் மாஸ்டர் சில்வா விஜய் சார் படத்துக்கு இன்னைக்கு வந்ததுனால நான் இன்னைக்கி ஃபைட் போடல. தமிழ் நாட்டு மக்கள அவர் காப்பாத்திருக்காரு. அதனால தான் இங்க வந்தேன்'' என்றார்.
ஆர்ஜே பாலாஜி சொன்ன அப்டேட் - ''மாஸ்டர்' விஜய் தான் காரணம்'' வீடியோ