தல அஜித் ரசிகர்களுக்கு மறக்க முடியாத நாள் இந்த ஜனவரி 10 - ஏன் தெரியுமா ?
முகப்பு > சினிமா செய்திகள்By Karthikeyan S | Jan 10, 2020 06:20 PM
'நேர்கொண்ட பார்வைக்கு' பிறகு தல அஜித், H.வினோத் இயக்கத்தில் வலிமை படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை Bayview Projects LLP சார்பாக போனி கபூர் இந்த படத்தை தயாரித்து வருகிறார்.
![Thala Ajith Kumar's Veeram, Viswasam released on January 10 Thala Ajith Kumar's Veeram, Viswasam released on January 10](https://tamil.behindwoods.com/tamil-movies-cinema-news-ta/images/thala-ajith-kumars-veeram-viswasam-released-on-january-10-photos-pictures-stills.jpg)
இந்த படத்துக்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்க, நீரவ் ஷா இந்த படத்துக்கு ஒளிப்பதிவு செய்து வருகிறார். இந்த படத்தில் மெட்ராஸ் வட சென்னை உள்ளிட்ட படங்களில் நடித்த பாவெல் நவகீதன் முக்கிய வேடத்தில் நடிக்கிறாராம்.
இந்நிலையில் தல அஜித்தின் இரண்டு சூப்பர் ஹிட் படங்களான வீரம், வேதாளம் திரைப்படங்கள் ஜனவரி 10 ஆம் தேதி வெளியாகியிருந்தது. அதனால் தல ரசிகர்களுக்கு இன்று முக்கியமான நாளாக பார்க்கப்படுகிறது. இரண்டு படங்களையும் சிவா தான் இயக்கியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Tags : Ajith Kumar, Thala, Veeram, Viswasam