www.garudabazaar.com

பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் அடுத்து நடக்க இருக்கும் முக்கிய திருப்பம்... வெளியான புரோமோ..!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபல சீரியலான பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடருக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். இந்த சீரியலின் வெற்றியை குறிப்பாக சொல்ல வேண்டுமென்றால் தமிழில் இருந்து ஹிந்தியில் ரீமேக் செய்யப்பட்ட வெகு சில சீரியல்களில் பாண்டியன் ஸ்டோர்ஸும் ஒன்று. பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரின் மூலம் பிரபலமடைந்தவர் நடிகை சித்ரா. ஆரம்பத்தில் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் தொகுப்பாளராக பணியாற்றினாலும், அவரை புகழின் உச்சிக்கு அழைத்துச் சென்றது பாண்டியன் ஸ்டோர் தொடர் தான். இப்படி இருக்கும்போது சித்ரா சமீபத்தில் மரணமடைந்த செய்தி கேட்டு அனைவரும் அதிர்ச்சி அடைந்தனர். 

next big change in pandiyan stores பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் திருப்பம்

அவருக்கு பதில் பாரதி கண்ணம்மா தொடரில் நடித்து வந்த நடிகை காவ்யா தற்போது முல்லையாக நடித்து வருகிறார். இந்நிலையில் இந்த சீரியலில் தற்போது புதியதாக சிறுவர்கள் சிலர் நடிக்க இருக்கின்றனர் இதுபற்றிய தகவல் தற்பொழுது வைரலாகி வருகிறது. அதாவது மிகவும் பிரபலமாக ஓடிக்கொண்டிருக்கும் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் இருக்கும் நான்கு சகோதரர்களும் சிறுவயதில் எப்படி இருந்தார்கள் அவர்கள் வாழ்க்கையில் என்ன நடந்தது என்பது பற்றிய கதை தான் அடுத்து வரவிருக்கும் எபிசோடுகளாம். அதற்காக நடிகர்களை போன்றே சிறுவர்களை பிடித்து தற்போது கச்சிதமாக நடிக்க வைத்துள்ளனர். அதேபோல் மூத்த அண்ணன் திருமணம் நடந்த சுவாரசியமான சம்பவம் தான் தற்போது புரோமோவாக வெளியாகியுள்ளது. ரசிகர்கள் பலரும் இந்த காட்சிகளுக்காக எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றனர்.

பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் அடுத்து நடக்க இருக்கும் முக்கிய திருப்பம்... வெளியான புரோமோ..! வீடியோ

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

next big change in pandiyan stores பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் திருப்பம்

People looking for online information on Pandiyan Stores will find this news story useful.