Reliable Software
www.garudabazaar.com
www.garudabazaar.com

"பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் இருந்து விலகியது ஏன்"... பிரபல நடிகை வெளியிட்ட திடீர் வீடியோ..!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பாண்டியன் ஸ்டோர்ஸ் நிகழ்ச்சி ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலம். அந்த தொடரில் முல்லை, கதிர், தனம் என அந்த தொடரில் நடிக்கும் நடிகர்களை கதாப்பாத்திரங்களின் பெயர்களாலேயே ரசிகர்கள் அழைத்து வருகின்றனர். மேலும் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடர்பாக வெளியாகும் செய்திகள் அடிக்கடி வைரலாகி வருகின்றன. இந்த தொடரில் முதல் மூன்று அண்ணன்களுக்கு திருமணம் நடந்துவிட கடைக்குட்டியான கண்ணன் மட்டும் சிங்கிளாகவே சுற்றிவந்தார். இந்நிலையில் அவருக்கு ஜோடியாக ஆரம்பத்தில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் அழகிய தமிழ் மகள், ராஜா மகள் போன்ற பல தொடர்களில் நடித்த சத்யசாய் கிருஷ்ணா அறிமுகமானார்.

pandiyan stores actress shocking video பிரபல நடிகை வெளியிட்ட திடீர் வீடியோ

இதனை அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கூட பதிவிட்டிருந்தார். அதன் பிறகு அனுஷ்கா என்பவரும்  ஜோடியாக நடித்து வந்தார். தற்போது அவரும் மாற்றப்பட்டு புதிதாக தீபிகா என்பவரை களமிறக்கியுள்ளனர். இந்நிலையில் நடிகை தீபிகா தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். சீரியலில் இருந்து திடீரென விலகியது ஏன் என்று அவர் விளக்கம் அளித்துள்ளார். அவர் கூறும்போது "பாண்டியன் ஸ்டோர் ரசிகர்களுக்கு வணக்கம். அந்த தொடரில் என்னுடைய காட்சிகள் மிகவும் குறைவு. ஆனாலும் எனக்கு நீங்கள் ஆதரவு அளித்துவந்தீர்கள். இந்நிலையில் திடீரென தொடரில் இருந்து விலகியது ஏன் என்று பலரும் என்னைக் கேட்கின்றனர். உண்மையை சொல்ல வேண்டுமென்றால் எனக்கே தெரியாது. அந்த சீரியலில் இருந்து என்னை நீக்கியது ஏன் என்று யாரும் கூறவும் இல்லை. அதைப் பற்றி நான் தெரிந்து கொள்ளவும் போவது இல்லை. சீக்கிரமே விஜய் டிவியில் வேறொரு தொடர் மூலம் உங்களை சந்திப்பேன்" என்று கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

pandiyan stores actress shocking video பிரபல நடிகை வெளியிட்ட திடீர் வீடியோ

People looking for online information on Pandiyan Stores will find this news story useful.