www.garudabazaar.com

மறைந்த நகைச்சுவை நடிகர் 'விவேக்!'.. வீட்டுக்கு சென்று இரங்கல் தெரிவித்த 'தளபதி' விஜய்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நகைச்சுவை நடிகர் மற்றும் சின்ன கலைவாணர் விவேக் தமிழ் திரைத்துறை மட்டுமல்லாமல் தமிழ் சமூகத்திலும் தம்முடைய கருத்துக்களை நகைச்சுவை பாணியில் பேசி பங்காற்றியவர்.

Actor Vijay visit vivek house to convey condolence

குறிப்பாக தமது நகைச்சுவை காட்சிகளில் பகுத்தறிவுவாதம், மூட நம்பிக்கைக்கு எதிரான பிரச்சாரம், சமூக அக்கறை உள்ளிட்டவற்றை வெளிப்படுத்தி நடித்திருந்தவர். விஜய்யின் பிகில் திரைப்படத்தில் கடைசியாக விவேக் நடித்திருந்தார்.

விஜய் நடித்த பிகில் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் விஜய், விவேக் பற்றி பேசிய பழைய வீடியோ அண்மையில் மீண்டும் வைரலாகியது. இந்த நிலையில் நடிகர் விவேக் கடந்த ஏப்ரல் 17ஆம் தேதி உடல் நலக்குறைவால் சென்னையில் உள்ள பிரபல மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவருக்கு திரைக்கலைஞர்கள் இரங்கல் தெரிவித்தனர். இதனை தொடர்ந்து அரசுமுறை மரியாதையுடன் நடிகர் விவேக்கின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.

முன்னதாக நடிகர் விஜய், நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் உருவாகும் தளபதி65 படத்துக்காக ஜார்ஜியாவில் படப்பிடிப்பில் சென்றிருந்த நிலையில் தமிழகம் வந்த விஜய் விவேக்கின் வீட்டிற்கு சென்று விவேக்கின் மறைவு குறித்து விசாரித்ததுடன், விவேக்கின் மறைவுக்கு அஞ்சலி செலுத்திவிட்டு அவருடைய குடும்பத்தாருக்கு இரங்கல் தெரிவித்து விட்டு வந்திருக்கிறார்.

ALSO READ: இயக்குநர் அட்லீ குடும்பத்தில் நடந்த சோகம்! அட்லீயின் மனைவி உருக்கமான பதிவு!

Tags : Vivekh, Vijay, Bigil

மேலும் செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

Actor Vijay visit vivek house to convey condolence

People looking for online information on Bigil, Vijay, Vivekh will find this news story useful.