பாண்டியன் ஸ்டோர்ஸ் வீட்டுக்குள்ளேயும் புகுந்த கொரோனா... நடிகர் வெளியிட்ட உருக்கமான பதிவு...!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. இந்தியாவில் அதன் பரவலை தடுக்க கடந்த ஏப்ரல் மாதத்தில் இருந்து கடுமையான ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் சில மாதங்களுக்கு முன்புதான் ஊரடங்கு தளர்த்தப்பட்டது. இப்பொழுது தான் மக்கள் இயல்பான வாழ்க்கையை வாழத் துவங்கியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடருக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருக்கிறது. அதில் நடிக்கும் ஒவ்வொரு கதாபாத்திரங்களும், முக்கியமாக ஜோடிகளும் ரசிகர்களின் மனதை கவர்ந்துள்ளனர். தற்போது நிஜத்திலும் மீனாவிற்கு குழந்தை பிறந்திருப்பதால் இந்த ஜோடி தொடர்பான காட்சிகள் சற்று குறைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ஜீவா தற்போது தனது ரசிகர்களுக்கு ஒரு எமோஷனலான விஷயத்தை வெளியிட்டுள்ளார்.

popular pandiyan stores actor recovered from corona

பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் ஜீவா என்ற கதாபாத்திரத்தில் நடிக்கும் வெங்கட்க்கு சமீபத்தில் தளபதி விஜய் வீட்டில் இருந்து சர்ப்ரைஸ் கால் ஒன்று வந்திருந்தது. விஜய்யின் தந்தை இயக்குனர் எஸ்.ஏ.சி அவரை அழைத்து பாராட்டி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் ஜீவா தனது இன்ஸ்டாகிராமில் ஒரு பதிவிட்டுள்ளார் அதில் "கொரோனாவில் இருந்து முழுவதுமாக மீண்டுவிட்டேன். கடந்த 20 நாட்களாக தனிமைப்படுத்தப்பட்டேன். அவை நான் நினைத்ததை விட கடினமான நாட்கள். மிகவும் கடினமாக இருந்தன. 2020 எனக்கு பல விஷயங்களை கற்று தந்தது. ஆனால் அதற்காக நான் ஒருபோதும் நன்றி சொல்ல மாட்டேன்." என்று கூறியுள்ளார்.

தொடர்புடைய இணைப்புகள்

popular pandiyan stores actor recovered from corona

People looking for online information on Corona, Pandiyan Stores will find this news story useful.