அட இந்த பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகை தளபதி விஜய்யின் நெருங்கிய உறவினரா... யார் தெரியுமா..?

முகப்பு > சினிமா செய்திகள்

By |

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபல சீரியலான பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடருக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். இந்த சீரியலின் வெற்றியை குறிப்பாக சொல்ல வேண்டுமென்றால் தமிழில் இருந்து ஹிந்தியில் ரீமேக் செய்யப்பட்ட வெகு சில சீரியல்களில் பாண்டியன் ஸ்டோர்ஸும் ஒன்று. பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரின் மூலம் பிரபலமடைந்தவர் நடிகை சித்ரா. ஆரம்பத்தில் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் தொகுப்பாளராக பணியாற்றினாலும், அவரை புகழின் உச்சிக்கு அழைத்துச் சென்றது பாண்டியன் ஸ்டோர் தொடர் தான். அந்த தொடரில் வரும் குமரன், முல்லை ஜோடிக்கு ஏராளமான ரசிகர்கள் இருக்கின்றனர். இப்படி இருக்கும்போது சித்ரா சமீபத்தில் மரணமடைந்த செய்தி கேட்டு அனைவரும் அதிர்ச்சி அடைந்தனர். 

pandiyan stores actress in vijay relative இந்த நடிகை விஜய்யின் உறவினரா

சித்ராவின் மரணம் தற்கொலை என்று போலீசார் கூறியுள்ளனர். ஆனாலும் அவரது மரணத்தில் திடுக்கிடும் தகவல்கள் தினம்தினம் வெளியாகி வருகிறது. இந்நிலையில் அவருக்கு பதில் பாரதி கண்ணம்மா தொடரில் நடித்து வந்த நடிகை காவ்யா தற்போது முல்லையாக நடித்து வருகிறார். இந்த சீரியலில் மகன்களின் அம்மாவாக நடிக்கும் நடிகையை பற்றி பலருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. தளபதி விஜய்யின் சித்தியும், நடிகர் விக்ராந்தின் அம்மாவுமான அவரது பெயர் நடிகை ஷீலா. நடிகர் விஜய்யின் அம்மா ஷோபாவை போலவே  அவரது தங்கை ஷீலாவும் திரைத்துறையில் ஆர்வம் மிக்கவர். இந்நிலையில் விக்ராந்தின் மனைவி மானசாவும் சீரியல்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

pandiyan stores actress in vijay relative இந்த நடிகை விஜய்யின் உறவினரா

pandiyan stores actress in vijay relative இந்த நடிகை விஜய்யின் உறவினரா

தொடர்புடைய செய்திகள்

pandiyan stores actress in vijay relative இந்த நடிகை விஜய்யின் உறவினரா

People looking for online information on Pandiyan Stores will find this news story useful.