Michael Coffee house
Reliable Software
www.garudabazaar.com

பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகைக்கு விரைவில் திருமணம்... வெளியான நிச்சயதார்த்த புகைப்படங்கள்...!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபல சீரியலான பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடருக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். இந்த சீரியலின் வெற்றியை குறிப்பாக சொல்ல வேண்டுமென்றால் தமிழில் இருந்து ஹிந்தியில் ரீமேக் செய்யப்பட்ட வெகு சில சீரியல்களில் பாண்டியன் ஸ்டோர்ஸும் ஒன்று. பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரின் மூலம் பிரபலமடைந்தவர் நடிகை சித்ரா. ஆரம்பத்தில் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் தொகுப்பாளராக பணியாற்றினாலும், அவரை புகழின் உச்சிக்கு அழைத்துச் சென்றது பாண்டியன் ஸ்டோர் தொடர் தான். இப்படி இருக்கும்போது சித்ரா சமீபத்தில் மரணமடைந்த செய்தி கேட்டு அனைவரும் அதிர்ச்சி அடைந்தனர்.  இந்நிலையில் அவருக்கு பதில் பாரதி கண்ணம்மா தொடரில் நடித்து வந்த நடிகை காவ்யா தற்போது முல்லையாக நடித்து வருகிறார்.

popular pandiyan stores actress engagement பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகைக்கு திருமணம்

அவருக்கு பதில் பாரதி கண்ணம்மா தொடரில் நடித்து வந்த நடிகை காவ்யா தற்போது முல்லையாக நடித்து வருகிறார். இத்தொடரில் ஸ்டாலின், சுஜிதா, சரவண விக்ரம், ஹேமாராஜ், குமரன் தங்கராஜன், வெங்கட் ரங்கநாதன், சரவண விக்ரம் உள்ளிட்ட பலர் நடித்து வரும் நிலையில் ஒவ்வொரு கேரக்டருக்கும் தனித்தனியே மிகப்பெரிய ரசிகர் பட்டாளம் இருக்கிறது. மிகவும் பிரபலமாக ஓடிக்கொண்டிருக்கும் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் இருக்கும் நான்கு சகோதரர்களும் சிறுவயதில் எப்படி இருந்தார்கள் அவர்கள் வாழ்க்கையில் என்ன நடந்தது என்பது பற்றிய கதை தான் அடுத்து வரவிருக்கும் எபிசோடுகளாம்.  இந்நிலையில் முதன் முதலில் இந்த சீரியல் வெளியானபோது மீனாவாக நடிக்க இருந்தவர் பெயர் நடிகை கவிதா கவுடா.  இவருக்கும் அவரோடு லஷ்மி பிரம்மா தொடரில் நாயகனாக நடித்த சந்தன்குமார் என்பவருக்கும் கடந்த சில நாட்களுக்கு முன்னர் திருமண நிச்சயதார்த்தம் நடந்து முடிந்துள்ளது. இந்த அழகிய வீடியோ இதோ..!

பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகைக்கு விரைவில் திருமணம்... வெளியான நிச்சயதார்த்த புகைப்படங்கள்...! வீடியோ

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

popular pandiyan stores actress engagement பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகைக்கு திருமணம்

People looking for online information on Kavitha, Pandiyan Stores will find this news story useful.