பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் இணைந்த புதிய நடிகை.... இனிமே சண்டைக்கு பஞ்சமே இருக்காது போல..!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர் சீரியல் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றுள்ளது. அந்த சீரியலை இந்தியில் ரீமேக் செய்யப் போகிறார்கள் என்பது கூடுதல் தகவல். இப்படிப்பட்ட உயரிய அங்கீகாரத்தை பெற்றுள்ள பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் நடித்து வந்த நடிகை சித்ரா சமீபத்தில் மரணம் அடைந்தார். அவரது மறைவு ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. தற்கொலை என்று போலீசார் கூறியுள்ளனர். ஆனாலும் அவரது மரணத்தில் திடுக்கிடும் தகவல்கள் தினம்தினம் வெளியாகி வருகிறது.

new actress joins pandiyan stores serial பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் புதிய நடிகை

இந்நிலையில் அவருக்கு பதில் பாரதி கண்ணம்மா தொடரில் நடித்து வந்த நடிகை காவ்யா தற்போது முல்லையாக நடித்து வரும் அவரை ரசிகர்கள் கொஞ்சம் கொஞ்சமாக ஏற்று வருகின்றனர். இந்நிலையில் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் புதிய மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

new actress joins pandiyan stores serial பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் புதிய நடிகை

அதாவது தற்போது தனம் கர்ப்பமாக இருக்கிறார். அவருக்கு முல்லையும், மீனாவும் உதவி செய்து அன்புடன் பார்த்து கொள்கின்றனர். அதனால் சில தினங்களாக மிகவும் மகிழ்ச்சியாக சென்று கொண்டிருந்தது. இந்நிலையில் பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்திற்கு புதிதாக மீனாவின் அத்தை ஒருவர் வருகை தந்துள்ளது போல் புதிய நடிகை ஒருவரை களமிறங்கியுள்ளனர். இந்நிலையில் அவர் கதாபாத்திரம் வில்லி கதாபாத்திரம் போல் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இனி அதிரடி திருப்பங்களும், சண்டைகளும் வரும் என்று ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் இணைந்த புதிய நடிகை.... இனிமே சண்டைக்கு பஞ்சமே இருக்காது போல..! வீடியோ

தொடர்புடைய செய்திகள்

new actress joins pandiyan stores serial பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் புதிய நடிகை

People looking for online information on Pandiyan Stores will find this news story useful.