தேசிய விருது குறித்து வெளியான அறிவிப்பு

முகப்பு > சினிமா செய்திகள்

By |

ஒவ்வொரு வருடமும் இந்தியாவில் சிறந்த படங்கள், சிறந்த கலைஞர்களுக்கு மத்திய அரசு சார்பாக தேசிய விருது வழங்கப்படுவது வழக்கம். மேலும் ஒவ்வொரு வருடமும் ஏப்ரல் மாதம் விருது பெறுபவர்கள் பற்றிய அறிவிப்பும், மே மாதம் விருது வழங்கும் நிகழ்வும் நடைபெறுவது வந்தது.

National award for films will announce after Lok Sabha Election

இந்த தேசிய அளவில் சிறந்த படத்துக்கும் சிறந்த இயக்கம், கதை , ஒளிப்பதிவு, இசை, எடிட்டிங், சிறந்த நடிகர்கள், பாடல்கள் என பல்வேறுத்துறைகளுக்கு வழங்கப்பட்டுவருகிறது.

மேலும், மொழி ரீதியாகவும் சிறந்த படங்களுக்கு தேசிய விருதுகள் வழங்கப்படும். தேசிய விருதினை குடியரசுத் தலைவர் வழங்குவார்.  அதனைத் தொடர்ந்து கலைத் துறையில் வாழ்நாள் முழுவதும் சிறப்பான பங்களிப்பை வழங்கும் கலைஞர்களுக்கு தாதாசாஹேப் பால்கே விருது வழங்கப்படுகிறது.

இந்நிலையில் இந்த வருடம் நாடாளுமன்றத் தேர்தல் பரபரப்பாக நடைபெற்றுவருவதால் இந்த வருடத்துக்கான தேசிய விருதுகள் நாடாளுமன்றத் தேர்தல் முடிந்தபிறகு வழங்கப்படும் என தெரிகிறது.