''இதலாம் பார்க்கும் போது டிவிய மட்டுமா உடைக்கணும்னு தோணும்...'' கமலின் புதிய வீடியோ

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தமிழகத்தில் வருகிற 18 ஆம் தேதி நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறவிருக்கிறது. அதற்காக அரசியல் கட்சிகள் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுவருகின்றன.  மேலும் ஒவ்வொரு கட்சித் தலைவர்களும் எதிர்கட்சியை மிகக் கடுமையாக விமர்சித்துவருகின்றனர்.

Kamal Haasan released new video through his Twitter about Lok Sabha Election

அதன் ஒரு பகுதியாக மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவரும் நடிகருமான கமல்ஹாசன் தனது கட்சி வேட்பாளர்கள் சார்பாக தீவிரமாக பிரச்சாரத்தில் ஈடுபட்டுவருகிறார். மேலும் ட்விட்டர் பக்கத்திலும் அவ்வப்போது வீடியோ வெளியிட்டு ஆதரவு கேட்டு வருகிறார்.

குறிப்பாக கடைசியாக அவர் வெளியிட்டுள்ள வீடியோ வைரலானது. அதில், அரசியல்கட்சித் தலைவர்களின் குரல் ஒவ்வொன்றாக கேட்கும். பிறகு அவர் கோபப்பட்டு டிவியை உடைப்பது போன்று காட்டப்படும்.

அதனைத் தொடர்ந்து தற்போது மீண்டும் ஒரு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், அரசியல்கட்சிகளின் வாக்குறுதிகளை விமர்சிக்கும் அவர், இதலாம் பார்க்கும் போது டிவிய மட்டுமா உடைக்கணும்னு தோணும் என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

''இதலாம் பார்க்கும் போது டிவிய மட்டுமா உடைக்கணும்னு தோணும்...'' கமலின் புதிய வீடியோ வீடியோ