''வாக்களிப்பது உங்கள் உரிமை: உங்கள் உரிமைக்காக போராடுங்கள்'' - சிவகார்த்திகேயன்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தமிழகத்தில் நாடாளுமன்றத் தேர்தல் விறுவிறுப்பாக நடைபெற்றுவருகிறது. மக்கள் நீண்ட வரிசையில் நின்று தங்கள் ஜனநாயகக் கடமையை ஆற்றிவருகின்றனர். அதன் ஒருபகுதியாக திரையுலக பிரபலங்களும் தங்கள் காலையிலிருந்து வாக்களித்து வருகின்றனர்.

Sivakarthikeyan tweets about his Vote and Lok sabha Election

குறிப்பாக ரஜினி, கமல், விஜய், அஜித் ஆகியோர் காலையில் வாக்களித்தனர். அதனைத் தொடர்ந்து வாக்களிக்க வந்த சிவகார்த்திகேயனுக்கு வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லை என்பதை காரணம் காட்டி அவருக்கு வாக்களிக்க மறுப்பு தெரிவிக்கப்பட்டதாக கூறப்பட்டது.

இந்நிலையில் தன்னிடம் வாக்காளர் அடையாள அட்டை உள்ளிட்ட ஆவனங்களை காட்டி சிவகார்த்திகேயன் வாக்களித்ததாக கூறப்படுகிறது. இதனை உறுதிப்படுத்தும் வகையில் மை வைக்கப்பட்ட தன் ஆட்காட்டி விரலை  காட்டிய புகைப்படத்தை தனது ட்விட்டர் பகிர்ந்த சிவகார்த்திகேயன், வாக்களிப்பது உங்கள் உரிமை. உங்கள் உரிமைக்காக போராடுங்கள் என்று தெரிவித்தார்.

''வாக்களிப்பது உங்கள் உரிமை: உங்கள் உரிமைக்காக போராடுங்கள்'' - சிவகார்த்திகேயன் வீடியோ