''மறுபடியும் முதல்ல இருந்தா ?'' - தேர்தல் குறித்து தன் ஸ்டைலில் பதிலளித்த வடிவேலு

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தமிழகத்தில் நாடாளுமன்றத் தேர்தல் பரபரப்பாக நடைபெற்றுவருகிறது.  வாக்காளர்கள் தங்கள் பகுதியிலுள்ள வாக்குச்சாவடிகளில் நீண்ட வரிசையில் நின்று வாக்களித்து வருகின்றனர். மேலும் திரையுலக மற்றும் அரசியல் பிரபலங்களும் தங்கள் ஜனநாயகக் கடமையை ஆற்றி வருகின்றனர்.

Vadivelu answers about Lok sabha election in his style

அதன் ஒரு பகுதியாக நடிகர் வடிவேலு சாலிகிராமத்தில் உள்ள தனது வாக்குச்சாவடிக்கு சென்று வாக்களித்தார் . அவர் வாக்களிப்போது போல்  புகைப்படங்களுக்கு போஸ் கொடுங்கள் என்று செய்தியாளர்கள் சொன்னார்கள் .

அப்போது தன் ஸ்டைலில் நடனம் ஆடினார். பின்னர் வாக்களித்து விட்டு வந்து பேசிய வடிவேலு, செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்தார். அப்போது, ''நான் மக்களுக்கு எதுவும் சொல்லத் தேவையில்லை. அவர்கள் தெளிவாக இருக்கிறார்கள். தேர்தல் என்பது திருவிழாவுக்கு சமம். உள்ளங்கையில் உலகம் வந்து விட்டது என்றார்.

இளைஞர்களுக்கு என்ன சொல்ல விரும்புகிறீர்கள் என்ற கேள்விக்கு மறுபடியும் முதல்ல இருந்தா ?'' என்று ஜாலியாக பதிலளித்தார்.

''மறுபடியும் முதல்ல இருந்தா ?'' - தேர்தல் குறித்து தன் ஸ்டைலில் பதிலளித்த வடிவேலு வீடியோ