தமிழகம் உட்பட 13 மாநிலங்களில் இரண்டாம் கட்டமாக நாடாளுமன்ற தேர்தல் விறுவிறுப்பாக நடைபெற்றுவருகிறது. திரையுலக பிரபலங்கள் தங்கள் வாக்குகளை காலை முதல் பதிவு செய்துவருகின்றனர்.

குறிப்பாக நடிகர்கள் ரஜினி, கமல், விஜய், அஜித் உள்ளிட்டோர் காலையிலேயே அவர்கள் பகுதியில் உள்ள வாக்குச்சாவடியில் தங்கள் வாக்குகளை பதிவு செய்தனர். இந்நிலையில் வாக்களித்து விட்டு வந்து பேசிய நடிகர் விஜய் சேதுபதி, முதன் முறையாக வாக்களிப்பவர்களுக்கு வாழத்துகள்.
உங்களுக்கு இது பெருமைக்குரிய விஷயம். 18 வயசுல நம்ம வீட்ல முடிவெடுக்கவே நம்மள கேட்பாங்களானு தெரியாது. ஆனால் நம்மை யார் ஆட்சி பண்ணனும்கிற உரிமைய உங்க கிட்ட கொடுத்துருக்காங்க.
உங்க எல்லோருக்கும் என் வாழ்த்துகள். நானும் வாக்களித்து விட்டேன். எல்லோரையும் போல நல்லது நடக்கும்னு நம்பிக்கையில் காத்திருக்கிறேன் என்றார். பின்னர் தன் ஆள்காட்டி விரலை காட்டிய அவர், ''நெய்ல் பாலீஷ் மாதிரி போட்ருக்காங்க...'' என்று நக்கலாக தெரிவித்தார்.
''நெய்ல் பாலீஷ் மாதிரி போட்ருக்காங்க'' - விஜய் சேதுபதி நக்கல் வீடியோ