நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அரசியல் கட்சிகள் பரபரப்பாக வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுவருகின்றன. குறிப்பாக பல்வேறு திரையுலக பிரபலங்களும் அவர்கள் சார்ந்த கட்சிகளுக்கு தீவிரமாக பிரச்சாரம் செய்துவருகிறார்கள்.

இந்நிலையில் பிரபல இயக்குநர் ராம் கோபால் வர்மா, வருகிற தேர்தலில் பிரபல தெலுங்கு நடிகர் பவண் கல்யாணை எதிர்த்து போட்டியிடப்போவதாக தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார்.
பின்னர் சிறிது நேரத்திலேயே இது வெறும் ஏப்ரல் ஃபூல் ஜோக் தான். இதனை யாரும் நம்ப மாட்டீர்கள் என கருதுகிறேன் என்று அதற்கு பதிலளித்துள்ளார்.
ராம் கோபால் வர்மா 'லக்ஷ்மி என்டிஆர்' என்ற பெயரில் பிரபல தெலுங்கு நடிகரும் அரசியல்வாதியுமான என்டிஆரின் வாழ்க்கையின் ஒரு அத்தியாத்தை படமாக்கி வருகிறார்.
This is just an advance April Fool Joke ..I hope no one was stupid enough to believe it 😎 https://t.co/4XUU5q9vsz
— Ram Gopal Varma (@RGVzoomin) March 28, 2019